கள்ளக்காதல் வைத்திருந்த கணவனின் ஆணுறுப்பில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பெண்!

தமிழகத்தின் மதுரை பகுதியில் தன்னை விட்டு விட்டு வேறு பெண்ணுடன் கள்ளக்காதல் வைத்திருந்த கணவனின் ஆணுறுப்பில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி மனைவி தண்டனை கொடுத்துள்ளார். அவர் மீது தமிழகத்தின் மதுரை பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ள பொலிஸார், மதுரை நேரு நகரைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவர் மனைவி மற்றும் 3 பிள்ளைளுடன் அப்பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பரமேஸ்வரனுக்கு விரட்டிப்பத்து பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் அது கள்ளக் காதலாக மாறியுள்ளதையடுத்து, அவரது மனைவிக்கு தெரியாமல் இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்ததுடன், குடும்பத்தை கவனிக்காது வந்துள்ளார்.

கணவனின் கள்ளத்தொடர்பை அறிந்த மனைவி கணவனிடம் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பரமேஸ்வரன் வீட்டுக்கு வராமல் தனது கள்ளக்காதலியின் வீட்டிலேயே தங்கியுள்ளார்.

கணவனின் செயல் குறித்து மதுரை பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாட்டின் பேரில் பரமேஸ்வரனை அழைத்த பொலிஸார் அவரை கண்டித்துள்ளனர்.
ஆனாலும் பரமேஸ்வரன் தனது கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார்.

எந்த விதத்திலும் தனது முடிவை மாற்றாது இருந்த கணவனை தனது வீட்டுக்கு அழைப்பதற்கு அந்தப் பெண் முடிவு செய்துள்ளார். அதன்படி கணவனை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, இனி உங்களது கள்ளக்காதல் குறித்து எதுவும் கேட்கமாட்டேன் என்றும் தன்னுடன் மதுரைக்கு வந்து வசிக்குமாறு அழைத்துள்ளார்.

மனைவியின் மென்மையான பேச்சை நம்பிய பரமேஸ்வரன், மதுரையிலுள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். ஆசை வார்த்தை கூறிய மனைவியிடம் உல்லாசம் அனுபவித்துள்ளார். பின்னர் பரமேஸ்வரன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும்போது, மனைவி ஏற்கெனவே கொதிக்க வைத்திருந்த எண்ணெய்யை எடுத்து அவரது ஆணுறுப்பில் ஊற்றியுள்ளார்.

வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார் பரமேஸ்வரன். பரமேஸ்வரனின் அலரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டுக்கு விரைந்துள்ளனர். அங்கு காயங்களுடன் வலியால் துடித்துக் கொண்டிருந்த பரமேஸ்வரனை மீட்டு மதுரையிலுள்ள அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மதுரை பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப் பட்டதையடுத்து, பரமேஸ்வரனின் மனைவியை விசாரணைக்காக பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.

“கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த எனது கணவர் வீட்டை கவனிக்காது கள்ளக்காதலியின் வீட்டில் தங்கியுள்ள ஆத்திரத்தில் கொதிக்கும் எண்ணெய்யை எனது கனவரின் ஆணுறுப்பில் ஊற்றினேன்” என்று குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

பின்னர் குறித்த பெண் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கள்ளத்தொடர்பு வைத்திருந்த கணவனுக்கு கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி மனைவி கொடுத்த தண்டனை மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பாக பேசப்படுவதாக கூறப்படுகின்றது

(Visited 78 times, 1 visits today)

Post Author: metro