மோட்டார் சைக்கிளில் பயணித்த மாமாவையும் மருமகனையும் காட்டு யானை தாக்கியதில் காயம்

திரு­கோ­ண­மலை மஹ­தி­வுல்­வெவ பகு­தியில் மோட்டார் சைக்­கிளில் பய­ணித்துக் கொண்­டி­ருந்த மாமா­வையும் மரு­ம­க­னையும் காட்டு யானை தாக்­கி­யதில் படு­கா­ய­ம­டைந்த நிலையில் வைத்­தி­ய­சா­லையில் இன்­று காலை அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

மஹ­தி­வுல்­வெவ விகா­ர­கம பகு­தியில் சேனைப் பயிர்ச்­செய்­கையில் ஈடு­பட்­டு­வரும் இவர்கள் வீட்­டுக்கு திரும்பிக் கொண்­டி­ருந்த போதே வழியில் யானை தாக்­கி­ய­தா­கவும் மஹ­தி­வுல்­வெவ பிர­தேச வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து மேல­திக சிகிச்­சைக்­காக திரு­கோ­ண­மலை பொது வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­ட­தா­கவும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

(Visited 27 times, 1 visits today)

Post Author: metro