இந்தியாவின் வெற்றியை தனஞ்செய,ரொஷேன் தடுத்தனர்; 3 ஆவது டெஸ்ட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா விளை­யாட்­ட­ரங்கில் மிகவும் இக்­கட்­டான நிலையில் பொறுப்­பு­ணர்­வுடன் துடுப்­பெ­டுத்­தாடி தனஞ்­செய டி சில்வா பெற்ற சதமும் அறி­முக வீரர் ரொஷேன் சில்வா பெற்ற அரைச் சதமும் இந்­தி­யா­வுக்கு எதி­ரான மூன்­றா­வதும் கடை­சி­யு­மான டெஸ்ட் போட்­டியை இலங்கை வெற்­றி­தோல்­வி­யின்றி முடித்­துக்­கொள்ள உத­வின.

எவ்­வா­றா­யினும் மூன்று போட்­டிகள் கொண்ட தொடரில் 2ஆவது டெஸ்டில் வெற்­றி­பெற்ற இந்­தியா தொடரை 1 க்கு 0 என தன­தாக்­கிக்­கொண்­டது.

லஹிரு திரி­மான்­ன­வுக்குப் பதி­லாக இந்தத் தொடரில் முதல் தட­வை­யாக விளை­யா­டிய தனஞ்­செய டி சில்வா தனது 11ஆவது டெஸ்ட் போட்­டியில் மூன்­றா­வது சதத்தைக் குவித்தார்.

நான்காம் நாள் ஆட்ட நேர­மு­டி­வின்­போது 13 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்­காமல் இருந்த தனஞ்­செய, தொடைப் பகு­தியில் ஏற்­பட்ட உபா­தைக்கு மத்­தியில் சிர­மத்­துடன் துடுப்­பெ­டுத்­தாடி சதம் குவித்தார்.
270 ஓவர்கள் தாக்­குப்­பி­டித்த தனஞ்­செய 219 பந்­து­களை எதிர்­கொண்டு 119 ஓட்­டங்கள் பெற்­றி­ருந்­த­போது உபாதை தாங்க முடி­யாமல் ஆடு­க­ளத்தை விட்டுச் சென்றார்.

முத­லா­வது இன்­னிங்ஸில் அபார சதம் குவித்த ஏஞ்­சலோ மெத்யூஸ் கடைசி நாளான நேற்று ஒரு ஓட்­டத்­துடன் ஆட்­ட­மி­ழந்­த­போது இலங்கை அணி 4 விக்கெட் இழப்­புக்கு 35 ஓட்­டங்­க­ளுடன் பெரும் இக்­கட்­டான நிலையை எதிர்­கொண்­டது. இதன் கார­ண­மாக தங்­களால் வெற்றி பெற முடியும் என்ற மம­தையில் விராத் கோஹ்லி தலை­மை­யி­லான இந்­திய அணி­யினர் மிதந்­தனர்.

ஆனால் அதன் பின்னர் தனஞ்­செ­யவும் அணித் தலைவர் தினேஷ் சந்­தி­மாலும் மிகவும் அவ­தா­னத்­து­டனும் பொறுப்­பு­ணர்­வு­டனும் துடுப்­பெ­டுத்­தாடி 5ஆவது விக்­கெட்டில் 112 ஓட்­டங்­களைப் பகிர்ந்து இந்­திய அணி­யி­னரை சோத­னைக்­குள்­ளாக்­கினர்.

சந்­திமால் ஆட்­ட­மி­ழந்த பின்னர் ரொஷேன் சில்­வா­வுடன் 6ஆவது விக்­கெட்டில் 58 ஓட்­டங்­களைப் பகிர்ந்­தி­ருந்­த­போது தேநீர் இடை­வே­ளைக்கு ஒரு ஓவர் இருக்­கையில் தனஞ்­செய டி சில்வா உபாதை கார­ண­மாக ஓய்­வ­றைக்குத் திரும்­பினார்.

இது ஒரு­வ­கையில் இந்­திய வீரர்­க­ளுக்கு மகிழ்ச்சி தரு­வ­தாக அமைந்­தது.
என்­றாலும் ரொஷேன் சில்­வாவும் நிரோஷன் திக்­வெல்­லவும் 27 ஓவர்­களைத் தாக்­குப்­பி­டித்து தொடர்ந்த 6 ஆவது விக்­கெட்டில் 94 ஓட்­டங்­களைப் பகிர்ந்து டெஸ்ட் போட்டி வெற்­றி­தொல்­வி­யின்றி முடி­வ­டை­வதை உறுதி செய்­தனர்.

தனது அறி­முக டெஸ்டின் முதல் இன்­னிங்ஸில் ஓட்டம் பெறாமல் ஆட்­ட­மி­ழந்த ரொஷேன் சில்வா இரண்­டா­வது இன்­னிங்ஸில் 154 பந்­து­களை எதிர்­கொண்டு 74 ஓட்­டங்­களைப் பெற்றார். இது அவ­ரது முத­லா­வது அரைச் சத­மாகும்.

இப் போட்­டியின் ஆட்ட நாய­க­னான விராத் கோஹ்லி, தொடரில் ஒரு இரட்டைச் சதம் உட்­பட 3 சதங்­க­ளுடன் 610 ஓட்­டங்­களைப் பெற்ற தொடர் நாயகன் விரு­தையும் தன­தாக்­கிக்­கொண்டார்.

எண்­ணிக்கை சுருக்கம்

இந்­தியா 1ஆவது இன்: 536 – 7 விக். டிக். (விராத் கோஹ்லி 243, முரளி விஜய் 155, ரோஹித் ஷர்மா 65, லக் ஷான் சந்­தகேன் 167 – 4 விக்.)

இலங்கை 1ஆவது இன்: சக­லரும் ஆட்­ட­மி­ழந்து 373 (தினேஷ் சந்­திமால் 164 ஏஞ்­சலோ மெத்யூஸ் 111, டில்­ருவன் பெரேரா 42, சதீர சம­ர­விக்­ரம 33, ஆர். அஷ்வின் 90 – 3 விக்., இஷாந்த் ஷர்மா 98 – 3 விக்., மொஹமத் ஷமி 85 க்கு 2 விக்.)

இந்­தியா 2ஆவது இன்: 246 – 5 விக். டிக். (ஷிக்கர் தவான் 67, ரோஹித் ஷர்மா 50 ஆ.இ., விராத் கோஹ்லி 50, சேத்­தேஷ்வர் புஜாரா 49, தனஞ்­செய டி சில்வா 31 – 1 விக்.)

இலங்கை (போட்டி முடிவுக்குவந்தபோது) 2ஆவது இன்: 299 – 5 விக். (தனஞ்செய டி சில்வா 119 உபாதையால் ஓய்வு, ரொஷேன் சில்வா 74 ஆ.இ., நிரோஷன் திக்வெல்ல 44 ஆ.இ. தினேஷ் சந்திமால் 36, ரவீந்த்ர ஜடேஜா 81 – 3 விக்.)

(Visited 48 times, 1 visits today)

Post Author: metro