என்னை பொறுத்­த­வரை கதை தான் முக்­கியம் – ரம்யா நம்­பீசன்

என்னை பொறுத்­த­வரை புது­மு­க­மாக இருந்­தாலும் கதை தான் முக்­கியம் என்று ரம்யா நம்­பீசன் தெரி­வித்­தி­ருக்­கிறார். ப்ரதீப் கிருஷ்­ண­மூர்த்தி இயக்­கத்தில் சிபிராஜ், ரம்யா நம்­பீசன், ஆனந்த்ராஜ், சதீஷ் ஆகியோர் நடிப்பில் உரு­வாகியிருக்கும் படம் ‘சத்யா’. சைமன் கிங் இசை­ய­மைப்­பா­ள­ரா­கவும், அருண்­மணி ஒளிப்­ப­தி­வா­ள­ரா­கவும் பணி­பு­ரிந்­தி­ருக்­கி­றார்கள். சத்­யராஜ் தயா­ரித்­தி­ருக்­கிறார்.

‘சத்யா’ குறித்து ரம்யா நம்­பீசன் பேசி­யி­ருப்­ப­தா­வது: நான் எப்­போ­துமே நல்ல கதை­களை மட்­டுமே நம்­புவேன். ‘சத்யா’ படத்தைப் பொறுத்­த­வரை என் கதா­பாத்­தி­ரத்தின் பெயர் ஸ்வேதா. ’சத்யா’ தெலுங்கில் பெரும் வர­வேற்பைப் பெற்ற ‘ஷனம்’ ரீமேக்­காகும். மற்ற மொழி­களில் நடிப்­ப­தனால் தமிழில் கொஞ்சம் இடை­வெளி விழுந்­து­விட்­டது.

தற்­போது தமி­ழுக்கு முக்­கி­யத்­துவம் கொடுத்து வரு­கிறேன். ‘சத்யா’ படத்தைத் தொடர்ந்து ‘நட்­புனா என்­னன்னு தெரி­யுமா’ படம் வெளி­யா­க­வுள்­ளது.

என்னைப் பொறுத்­த­வரை புது­மு­க­மாக இருந்­தாலும் கதை தான் முக்­கியம். ‘சேது­பதி’ படத்தில் அம்­மா­வா­கவும், ‘ஒருநாள் ஒரு­க­னவு’ படத்தில் ஸ்ரீகாந்த் தங்­கை­யா­கவும் நடித்­தி­ருக்­கிறேன். அதன் பின் ‘ராமன் தேடிய சீதை’, ‘குள்ள நரி கூட்டம்’ போன்ற படங்­களில் நாய­கி­யாக நடித்தேன்.

தங்­கை­யாக நடித்தால் கடைசி வரை தங்­கை­யாகத் தான் நடிக்க வேண்டியிருக்கும் என்றார்கள். அதை உடைக்கவே நாயகியானேன். இவ்வாறு ரம்யா நம்பீசன் தெரிவித்திருக்கிறார்.

(Visited 45 times, 1 visits today)

Post Author: metro