கோட்டாபயவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை 15 ஆம் திகதி வரை நீடிப்பு; நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு கடும் ஆட்சேபம்

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோட்­டா­பய ராஜ­பக்­ ஷ­வுக்கு எதி­ராக பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் எந்­த­வொரு சட்ட நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்க வேண்டாம் என அறி­வித்து நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் விதித்த இடைக்­கால தடைக்கு கடும் ஆட்­சே­பனை முன்­வைக்­கப்­பட்­டுள்ளது.

நேற்று இது தொடர்­பி­லான ரிட் மனு விசா­ர­ணைக்கு வந்த போது சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜ­ரான பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் விராஜ் தயா­ரத்ன,கோட்­டா­பய ராஜ­பக்­ ஷ­வுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளுக்கு தடை­யா­க­வுள்ள இடைக்­காலத் தடை உத்­த­ர­வா­னது பல விட­யங்­களை மறைத்து சமர்ப்­பிக்­கப்­பட்ட மனுவை அடிப்­ப­டை­யாக கொண்டு ஒரு தலைப் பட்­ச­மாக விதிக்­கப்­பட்­டது எனவும் அதனை உட­ன­டி­யாக நீக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.

இதன்­போது மனு­தா­ர­ரான கோட்­டா­பய ராஜ­பக்­ ஷ சார்பில் நீதி­மன்றில் பிர­சன்­ன­மான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்வா பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் விராஜ் தயா­ரத்­னவின் கோரிக்­கைக்கு எதிர்ப்பு வெளி­யிட்டார்.

 

இந் நிலையில், முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோட்­டா­பய ராஜ­பக்­ ஷவுக்கு எதி­ராக பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் எந்­த­வொரு சட்ட நட­வ­டிக்­கை­யையும் முன்­னெ­டுக்க வேண்டாம் என அறி­வித்து நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி பிறப்­பித்த இடைக்­கால தடை உத்­த­ரவை மேலும் 10 நாட்­க­ளுக்கு நீடித்து மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் உத்­த­­விட்­டது.

அத்­துடன் எதிர்­வரும் 15 ஆம் திகதி இம்­மனு தொடர்பில் விசா­ர­ணை­களை ஆரம்­பிப்­ப­தா­கவும் அன்­றைய தினம் இடைக்­கால தடையை நீக்­கு­வதா இல்­லையா என்­பது குறித்து அரச பிரதி சொலி­சிட்டர் ஜென­ரலின் வாதத்தை ஆராய்ந்து உத்­த­ரவு வழங்­கு­வ­தா­கவும் நீதி­மன்றம் அறி­வித்­தது.

டீ.ஏ. ராஜ­பக்­ ஷ ஞாப­கார்த்த அருங்­காட்­சி­யக நிர்­மா­ணிப்பின் போது அரச பணத்தை தவ­றாக பயன்­ப­டுத்­தி­யமை தொடர்பில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோட்­டா­பய ராஜ­பக்­ ஷவுக்கு சந்­தேக நப­ராக கரு­தப்­படும் நிலையில், அவர் தாக்கல் செய்­துள்ள ரீட் மனுவை நேற்று விசா­ர­ணைக்கு எடுத்துக் கொண்டே மேன் முறை­யீட்டு நீதி­மன்றம், எதிர்­வரும் டிசம்பர் 15 ஆம் திகதி வரை செல்­லு­ப­டி­யாகும் வண்ணம் இந்த இடைக்­காலத் தடை உத்­தரவை நீடித்­தது.

மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி எல்.டி.பி. தெஹி­தெ­னிய,ஷிரான் குண­ரத்ன ஆகிய இருவர் கொண்ட நீதி­ப­திகள் குழாம் முன்­னி­லையில் இந்த வழக்கு நேற்று மீள விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது மன்றில் ஆஜ­ரான பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் விராஜ் தயா­ரத்ன, கடந்த நவம்பர் 29 ஆம் திகதி ஆட்­சே­ப­னங்கள் இருப்பின் அவற்றை மன்றில் முன்­வைக்க முடியும் என நீதி­மன்றம் அறி­வித்­தி­ருந்­ததன் பிர­காரம் எதிர்ப்­புக்­களை முன்­வைத்தார்.

இந்த ரிட் மனு­வினை தாக்கல் செய்யும் போது மனு­தாரர் பல விட­யங்­களை மறைத்து மனுவை சமர்ப்­பித்­துள்­ள­தா­கவும், இடைக்­காலத் தடை உத்­த­ர­வா­னது ஒரு தலைப் பட்­ச­மாக, பிர­தி­வா­திகள் தரப்­பிடம் கோராது வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டிய பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் ,அதனால் இடைக்­கால தடை உத்­த­ரவை உட­ன­டி­யாக நீக்­கு­மாறு மன்றைக் கோரினார். அத்­துடன் குறித்த மனு மீதான ஆட்­சே­பங்­க­ளையும் அவர் நேற்றுச் சமர்­பித்தார்.

இதன்­போது மனு­தா­ர­ரான கோட்­டா­பய நந்த சேன ராஜ­பக்­க்ஷ சார்பில் மன்றில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்வா, பிரதி சொலி­ சி­ட்டர் ஜெனரல் விராஜ் தயா­ரத்­னவின் வாதத்­துக்கு கடும் எதிர்ப்பு வெளி­யிட்டார். இடைக்­கால தடை உத்­த­ர­வி­ருக்கும் நிலையில் உட­ன­டி­யாக விசா­ர­ணை­களை ஆரம்­பிக்க வேண்­டி­யதே அடுத்த கட்டம் என சுட்­டிக்­காட்­டிய அவர், விசா­ர­ணையை ஆரம்­பிக்கும் வரை இடைக்­கால தடை உத்­தரவை நீடிக்க வேண்­டுமே தவிர அதனை நீக்க முடி­யாது என வாதிட்டார்.

இந்­நி­லை­யி­லேயே கோட்­டா­பய ராஜ­பக்­க்ஷ எதி­ராக பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் நட­வ­டிக்கை எடுக்க விதிக்­கப்­பட்ட இடைக்­காலத் தடையை எதிர்­வரும் 15 ஆம் திக­தி­வரை நீடித்து மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் வழக்கை மீள அன்­றைய தினம் விசா­ரணை செய்ய தீர்­மா­னித்­தது. அத்­துடன் நேற்று முன்­வைக்­கப்­பட்ட ஆட்­சே­பங்கள் தொடர்பில் ஆராய்­வ­தா­கவும், அதன்­படி இடைக்­கால தடையை நீக்­கு­வதா இல்­லையா என்­பது குறித்து அன்­றைய தினம் ஆராய்­வ­தாகவும் நீதி­மன்றம் அறி­வித்­தது.

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோட்­டா­பய ராஜ­பக்­ ஷ தனது சட்­டத்­த­ரணி சனத் விஜே­வர்­தன ஊடாக மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் ரிட் மனு ஒன்­றினை தாக்கல் செய்தார். பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் தன்னைக் கைது செய்ய எத்­த­னிப்­பதை தடுத்து, நீதிவான் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழான அறிக்கை, உதவி பொலிஸ் அத்­தி­யட்­ச­கரின் சான்­றி­தழை வலு இழக்கச் செய்­யு­மாறும் அந்த ரிட் மனுவில் கோரப்­பட்­டுள்­ளது.

 

13 பக்­கங்­களைக் கொண்ட குறித்த ரிட் மனுவில் மனுவின் பிர­தி­வா­தி­க­ளாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர, குற்றப் புல­னாய்வுப் பிரிவு பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஷானி அபே­சே­கர, நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்­தி­ய­லங்­கார பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் சான்­றிதழ் வழங்­கிய நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் கமல் பலிஸ்­கர மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

முன்­ன­தாக வீர­கெட்­டி­யவில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட டி.ஏ. ராஜ­பக்­ ஷ மன்றம் தொடர்பில் அரச பணம் 900 இலட்சம் ரூபா பயன்­ப­டுத்­தப்பட்­டமை தொடர்பில் நிதிக் குற்றப் புலாய்வுப் பிரிவு விசா­ர­ணை­களை நடாத்தி கோவை­களை சட்ட மா அதி­ப­ருக்கு அனுப்பி ஆலோ­சனை கோரி­யது.

 

இந் நிலையில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய உள்­ளிட்ட ஐவரை கைது செய்­யு­மாறு சட்ட மா அதிபர் திணைக்­களம் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. இந் நிலை­யி­லேயே கைதைத் தடுக்கும் வண்ணம் ரீட் மனு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 25 times, 1 visits today)

Post Author: metro