அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் ஆகக் கூடிய சில்லறை விற்பனை விலை நிர்ணயம்!

(ரெ.கிறிஷ்­ணகாந்)

அத்­தி­யா­வ­சிய உணவுப் பொருட்கள் சில­வற்றின் ஆகக்­கூ­டிய சில்­லறை விலையை நிர்­ண­யித்­துள்­ள­தாக பாவ­னை­யாளர் அலு­வல்கள் அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்­ளது.

தேங்காய், பருப்பு, இறக்­கு­மதி செய்­யப்­பட்ட உருளைக் கிழங்கு மற்றும் கரு­வாடு ஆகி­ய­வற்­றுக்கு இவ்­வாறு ஆகக்­கூ­டிய சில்­லறை விலையை நிர்­ண­யித்­துள்­ள­தாக பாவ­னை­யாளர் பாவ­னை­யாளர் அலு­வல்கள் அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்­ளது. தேங்காய், பருப்பு, இறக்­கு­மதி செய்­யப்­பட்ட உருளைக் கிழங்கு மற்றும் கரு­வாடு ஆகி­ய­வற்­றுக்கு இவ்­வாறு ஆகக்­கூ­டிய சில்­லறை விலையை நிர்­ண­யித்­துள்­ள­தாக பாவ­னை­யாளர் அதி­கா­ர­சபைத் தலைவர் ஹசித தில­க­ரத்ன தெரி­வித்­துள்ளார்.

அதன்­படி தேங்காய் ஒன்றின் விலை 75 ரூபா­வா­கவும், பருப்பு ஒரு கிலோ விலை 130 ரூபா­வா­கவும் ஆகக் கூடிய சில்­லறை விலை­க­ளாக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் தெரி­வித்தார். அவ்­வாறே இறக்­கு­மதி செய்­யப்­படும் உரு­ளைக்­கி­ழங்கின் ஆகக்­கூ­டிய சில்­லறை விலை 76 ரூபா­வாக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த உணவுப் பண்­டங்­களின் புதிய ஆகக் கூடிய சில்­லறை விலை அடங்­கிய வர்த்­த­மானி அறி­வித்தல் இன்று (நேற்று) வெளி­யாகும் என பாவ­னை­யாளர் அலு­வல்கள் அதி­கார சபையின் தலைவர் தெரி­வித்தார். வாழ்­வா­தார செலவுக் குழு­வினால் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­துக்­க­மைய இந்த விலை நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்ள அதேவேளை, இது தொடர்பில் நேற்று முன்தினம் கூடிய அமைச்சரவையிலும் கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

(Visited 54 times, 1 visits today)

Post Author: metro