காலியில் ஆடைகள் விற்பனை நிலைய தீ விபத்தில் பொருட்களுக்கு பாரிய சேதம்

(ரெ.கிறிஷ்­ணகாந்)

காலி, களு­வெல்ல பிர­தே­சத்தில் அமைந்­துள்ள நவ­நா­க­ரீக ஆடை­யகம் ஒன்றில் நேற்று அதி­காலை இடம்­பெற்ற பாரிய தீ விபத்தில் பாரிய பொருட் சேதம் இடம்­பெற்­றுள்­ள­தாக காலி பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இரண்டு மாடி­களைக் கொண்ட இந்த ஆடை­ய­கத்தின் முத­லா­வது மாடியில் நேற்றுக் காலை 6.30 மணி­ய­ளவில் தீ ஏற்­பட்­டி­ருந்த நிலையில் அதனை அவ­தா­னித்த ஆடை­ய­கத்தின் பாது­காப்பு அதி­கா­ரிகள் காலி நகர சபையின் தீய­ணைப்பு பிரி­வி­ன­ருக்கு அறி­வித்­துள்­ளனர்.

தீய­ணைப்பு படை­யி­னர்கள் வரு­வ­தற்­கி­டையில் தீ இரண்­டா­வது மாடி வரை பர­வி­யி­ருந்த நிலையில், சம்­பவ இடத்­துக்குச் சென்ற காலி நகர சபையின் இரு தீய­ணைப்பு வாக­னங்­களின் மூலம் தீ கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

இதன்­போது, எவ்­வித உயிர் சேதங்­களும் ஏற்­ப­ட­வில்­லை­யென்றும், தீக்­கி­ரை­யா­கிய உடை­மை­களின் பெறு­மதி இது­வ­ரையில் கணக்­கி­டப்­ப­ட­வில்லை என்றும் காலி பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இந்­நி­லையில், தீ ஏற்­பட்­ட­மைக்­கான காரணம் கண்டறியப்படாத அதேவேளை, காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 39 times, 1 visits today)

Post Author: metro