நாவலப்பிட்டியில் ஒருவர் கொலை; கொடகவெலவில் முண்டம் மீட்பு

(ரெ.கிறிஷ்­ணகாந், எம்.எப்.எம்.பஸீர்)

நாவ­லப்­பிட்­டிய பொலிஸ் நிலை­யத்­து க்கு அருகில் இரு­வ­ருக்­கி­டையில் இடம்­பெற்ற மோதலில் ஒருவர் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

நாவ­லப்­பிட்­டிய பிர­தான பஸ் நிலை­யத்­துக்கு அருகில் நேற்று முற்­பகல் 11. 30 மணி­ய­ளவில் இரு­வ­ரி­டையே வாக்­குவாம் ஏற்­பட்டு பின்னர் அது கைக­லப்­பாக மாறி­யதன் கார­ண­மாக மோதலில் ஈடு­பட்ட நபர் ஒருவர் கண்­ணாடி போத்தல் ஒன்றை உடைத்து மற்­றைய நபரை குத்­தி­யுள்ள நிலையில், சம்­ப­வத்தில் காய­ம­டைந்த அந்­நபர் நாவ­லப்­பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட போது சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்ளார்.

இவ்­வாறு உயி­ரி­ழந்த நபர் நாவ­லப்­பிட்­டிய ரம்­புக்­பிட்­டிய, பலன்­தொட பிர­தே­சத்தை சேர்ந்த 53 வய­தான நப­ரொ­ரு­வரே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். உயி­ரி­ழந்­த­வரின் சடலம் பிரேத பரி­சோ­த­னைக்­காக நாவ­லப்­பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் வைக்­கப்­பட்­டுள்­ளது.

சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தா­கவும், அவர் தற்­போது அப்­பி­ர­தே­சத்­தி­லி­ருந்து தலை­மறை வாகி­யுள்ள நிலையில் அவரைக் கைது செய்­வ­தற்­கான மேல­திக விசா­ர­ணை­களை நாவ­லப்­பிட்­டிய பொலிஸார் முன்­னெ­டுத்­துள்­ள­தாவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் ருவன் குண­சே­கர தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை, கொட­க­வெல பல்­லே­பெத்த – தம்­ப­தென்ன பகு­தியில் உள்ள கறுவா உலர்த்தும் வாடியில் ஒருவர் நேற்று முன் தினம் இரவு கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.அஹுங்­கல்லை பகு­தியைச் சேர்ந்த 36 வய­தான லக்மால் ரண­துங்க என்­ப­வரே இவ்­வாறு கொல்­லப்பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

குறித்த நபர் கடந்த இரு தினங்­க­ளுக்கு முன்னர் இரு­வ­ருடன் குறித்த கறுவா உலர்த்தும் வாடிக்கு வந்­துள்ளார். இந்­நி­லையில் நேற்று அவ­ரது தலை, கை, கால்கள் அற்ற முண்­ட­மாக கறுவா உலர்த்தும் வாடியின் கூடா­ரத்­துக்குள் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்ளார்.

பின்னர் பொலிஸார் பிர­தே­சத்தில் முன்­னெ­டுத்த தேடு­தலின் போது அருகில் உள்ள கழி­வ­றையில் இருந்து துண்­டிக்­கப்பட்ட தலையும் அப்­ப­கு­தியில் வீசப்பட்­டி­ருந்த கை கால்­களின் பாகங்­க­ளையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.

குறித்த கொலையை செய்ததாக கூறப்படும் நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதுடன் அவர் பிரதேசத்தைவிட்டு தலைமறை வாகியுள்ளதால் கைது செய்ய இரு பொலிஸ் குழுக்களை கடமையில் ஈடுபடுத்தியுள்ளனர்.

(Visited 29 times, 1 visits today)

Post Author: metro