குளித்துக் கொண்டிருந்த பெண்ணை வீடியோ படமெடுத்து தினமும் உறவுக்கு அழைத்து வற்புறுத்தி வந்த நபர் கொலை

குளித்துக்கொண்டிருந்த இளம்பெண்ணை வீடியோ எடுத்து அவரை உறவுக்கு இணங்குமாறு வற்புறுத்தி வந்த நபரை அந்தப் பெண்ணின் கணவன் கொலை செய்த சம்பவம் தமிழகத்தின் நாமக்கல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 42). இவர் தன்னுடைய வீட்டின் அருகே வசிக்கும் பெண்ணொருவர் குளித்துக் கொண்டிருக்கும் போது அதனை படம் எடுத்து அதை காட்டி வற்புறுத்தி தினமும் பாலியல் உறவுக்கு அழைத்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் இது குறித்து தனது கணவர் காமராஜிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, காமராஜ் நாகராஜியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதன் பின்னரும் அவரது மனைவியை வற்புறுத்தி உறவுக்கு அழைத்து வந்துள்ளார்.

இதையடுத்து இருதரப்பினருக் கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நாகராஜின் நடவடிக்கை குறித்து தனது நண்பர்களிடம் தெரிவித்தார் காமராஜ். அவர்கள் அனைவரும் சேர்ந்து நாகராஜை தாக்கியுள்ளனர். அதே நாளில் மது கடைக்கு காமராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மது அருந்துவதற்கு சென்றபோது நாகராஜூம் அங்கு வந்துள்ளார். அவரை கண்டதும் ஆத்திரமடைந்த காமராஜ், நண்பர்களுடன் சென்று நாகராஜை மீண்டும் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த நாகராஜ் சிகிச்சைக்காக ஈரோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த கொலை தொடர்பாக நாகராஜ் மனைவி அளித்த முறைப்பாட்டின் பேரில், குமாரபாளையம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து காமராஜ், அவரது உறவினர் மோகன்ராஜ் மற்றும் நண்பர்களான காந்திபுரம் பகுதியை சேர்ந்த காட்டூர் தினேஷ் குமார், குமாரபாளையம், விட்டலபுரி பகுதியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம், அதே பகுதியை சேர்ந்த ஜீவா ஆகியோரை கைது செய்துள்ளனர்.

கைதான காமராஜ் பொலிஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு, எனது வீட்டின் அருகே வசித்து வந்தவர் நாகராஜ். கடந்த சில வாரங்களுக்கு முன்பு எனது மனைவி வீட்டின் அருகே குளித்தபோது அதனை நாகராஜ் ரகசியமாக கையடக்க தொலைபேசியில் படம் பிடித்துள்ளார். பின்னர் அந்த காட்சிகளை காட்டி எனது மனைவியை தினமும் உறவுக்கு அழைத்து தொல்லை கொடுத்துள்ளார்.

மேலும் இதற்கு எனது மனைவி மறுத்தால் ஊரிலுள்ள மற்றவர்களின் தொலைபேசி, வாட்ஸ் அப் மூலம் இந்த காட்சிகளை அனுப்பி விடுவேன் என கூறியுள்ளார்.  இதனால் பயந்து போன எனது மனைவி என்னிடம் இந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். நான், நாகராஜிடம் தொலைபேசியில் பதிவு செய்த அந்த ஆபாச காட்சிகளை உடனடியாக அழித்து விடும்படியும், தொலைபேசியிலுள்ள ‘மெமரி கார்டை’ எடுத்து தன்னிடம் தருமாறும் கேட்டேன். ஆனால், அவர் மறுத்து வந்தார்.

இதனால் கோபமடைந்த நான் எனது நண்பர்களிடம் கூறியதால் அவர்கள் நாகராஜை சரமாரியாகத் தாக்கினர். பின்னர் மது கடைக்கு சென்றோம். அங்கு நாகராஜூம் வந்தார்.

எனது மனைவியை ஆபாச படம் எடுத்து விட்டானே என ஆத்திரத்தில் இருந்த நான், அவரை அழைத்து சென்று மதுக் கடையின் பின்புறம் உள்ள மணி என்பவருடைய தோட்டத்தில் வைத்து தொலைபேசியினையும், மெமரி கார்டையும் தருமாறு கேட்டேன்.

அப்போது நாகராஜ் மெமரி கார்டை உடைத்து கொடுத்தார். நாகராஜிக்கும் எங்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது மாறி மாறி அடித்ததில் நாகராஜ் பலத்த காயமடைந்து கீழே சரிந்தார்.

பின்னர் நாங்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டோம். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். தற்போது பொலிஸ் விசாரணையில் நாங்கள் மாட்டிக்கொண்டோம் என்று காமராஜ் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட 5 பேரையும் பொலிஸார் திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

(Visited 185 times, 1 visits today)

Post Author: metro