கணவரின் கத்திக்குத்துக்கு இலக்கான மனைவி வைத்தியசாலையில் அனுமதி

(மது­ரங்­குளி நிருபர்)

தனது கண­வரின் கத்திக் குத்து தாக்­கு­த­லுக்கு உள்­ளான மனைவி ஒருவர் பலத்த காயங்­க­ளுடன் சிலாபம் வைத்­தி­ய­சா­லையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக சிலாபம் பொலிஸார் தெரி­வித்­தனர். சிலாபம் இர­ண­வில பிர­தே­சத்தைச் சேர்ந்த 43 வய­தான மூன்று பிள்­ளை­களின் தாய் ஒரு­வரே இவ்­வாறு கண­வரின் கத்திக் குத்து தாக்­கு­த­லுக்கு உள்­ளா­ன­வ­ராவார்.

சந்­தேக நபரை சிலாபம் பொலிஸார் கைது செய்­துள்­ள­தோடு அவரை சிலாபம் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்த நட­வ­டிக்கை மேற்­கொண்­டி­ருந்­தனர். சிலாபம் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் வசந்த ஹேரத் தலை­மை­யி­லான குழு­வினர் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

(Visited 45 times, 1 visits today)

Post Author: metro