நெஞ்சில் நிறைந்த பொன்­மனச் செம்மல் : இன்று 30 ஆவது ஆண்டு நினைவு தினம்

(கல்­லொ­ளுவை பாரிஸ்)

 

‘M’ என்­பது ஆங்­கில எழுத்­தா­னாலும் தமிழில் பெரும் சமத்­து­வத்­துக்­கு­ரிய சொல். அந்த ‘எம்’, எழுத்தை தனது முத­லெ­ழுத்­தாகக் கொண்டு வாழ்ந்­தவர், வாழ்­வித்­தவர் நடி­க­ராக இருந்தார், தலை­வ­ராகத் திகழ்ந்தார், முதல்­வ­ராக வாழ்ந்தார்! அவர் ஆட்­சிக்கு வந்த பின்தான் முதல்வர் என்று உல­கி­ன­ருக்குத் தெரியும் எனக்­கூற முடி­யாது. அதற்கு முன்பே அவர் மக்கள் மனங்­களில் முதல்­வராய் திகழ்ந்தார்.

மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். மறைந்து 30 வரு­டங்களாகின்றன. இன்று 24 ஆம் திகதி அவரின் 30 ஆவது நினைவு தினம்.

17.01.1917 ஆம் திகதி பிறந்த எம்.ஜி.ஆர்., இவ்­வு­லகை விட்டு 24.12.1987 ஆம் திகதி மறைந்தார். அன்று இந்­திய அரசு அன்­னா­ருக்கு “பாரத ரத்னா” என்ற விருதை கொடுத்து கௌர­வித்­தது. 17.1.1990 ஆம்­ திகதி அவ­ரு­டைய அஞ்சல் தலை வெளி­யி­டப்­பட்­டது. எம்.ஜி.ஆர். இவ்­வு­லகை விட்டு மறைந்­தாலும் மக்­களின் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்­டுதான் இருக்­கிறார்.

 

பிற­ருக்­கா­கவே வாழ்ந்த மக்கள் திலகம் “ நான் ஆணை­யிட்டால்,அது நடந்து விட்டால்…” என்ற பாடலின் மூலம் தனக்­கென தனி­யொரு மக்கள் கூட்­டத்­தையே சேர்த்துக் கொண்டார். இந்த மாம­னிதர் ஒரு சகாப்­த­மா­கவே வாழ்ந்த 1936 இலி­ருந்து 1978 ஆம் ஆண்டு வரை சுமார் 42 ஆண்­டுகள் திரை­யு­லகில் தன்­னாட்சி புரிந்து வெற்றி வாகை சூடி­யவர்.

எம்.ஜி.ஆருடன் அதி­க­மான திரைப்­ப­டங்­களில்நடித்த கதா­நா­ய­கிகள், ஜெய­ல­லிதா (28), சரோ­ஜா­தேவி (26), லதா (13) ஆகி­யோ­ராவார். எம்.ஜி.ஆர் நடித்த அதிக படங்­களைத் தயா­ரித்த நிறு­வனம் தேவர் பிலிம்ஸ் (16). அவரின் அதிக படங்­களை இயக்­கிய இயக்­கு­நர்கள் ப.நீல கண்டன் (17), எம்.ஏ.திரு முகம் (16), டி.ஆர். ராமண்ணா (8), கே.சங்கர் (8) ஆகி­யோ­ராவர்.

1968 இல் சிறந்த நடி­க­ருக்­கான மாநில அரசு விருது “குடி­யி­ருந்த கோயில்”, 1971 இல் சிறந்த நடி­க­ருக்­கான ‘பாரத விருது’ (பாராத் எம்.ஜி.ஆர்) ‘ரி­க் ஷாக்­காரன்” படத்­திற்­காக வழங்­கப்­பட்­டது. இந்­தி­யா­விலே தமிழ் நடிகர் ஒருவர் தேசிய அளவில் விருது பெற்­றது அதுவே முதல் முறை. 1969 இன் சிறந்த திரைப்­படம் “அடி­மைப்பெண்” 1973 இன் சிறந்த திரைப்­படம் “உலகம் சுற்றும் வாலிபன்” போன்­ற­வற்­றுக்கு “பிலிம்­பேயார்” விரு­துகள் கிடைக்­கப்­பெற்­றன.

இவர் 1960 களில் இலங்­கைக்கு வருகை தந்­த­போது அன்­றைய பிர­தமர் டட்லி சேனா­நா­யக்கா வழங்­கிய பட்டம் “நிருத்­திய சக்­க­ர­வர்த்தி.  மலே­ஷிய அரசு “கலை வேந்தன்” (1972), தமிழ்­வாணன் வழங்­கிய “மக்கள் திலகம்” என்ற பட்­டங்கள் தான் இன்­ற­ளவும் நிலைத்து நிற்­கி­றது.

எம்.ஜி.ஆர். தமி­ழக முதல்­வ­ராக பதவி வகித்த காலம் பத்­தாண்­டுகள். இவர் இயக்­கிய படங்கள் மூன்று. “நாடோடி மன்னன்” (1958), “உலகம் சுற்றும் வாலிபன்” (1973), “மது­ரையை மீட்ட சுந்­த­ர­பாண்­டியன்” (1978).

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்­றிய பேர­றிஞர் அண்ணா அவர்கள் அவ்­வப்­போது புகழ்ந்து கூறிய பாராட்­டுக்­களில் ஒரு­சில…. “என்னை அறி­யம­லேயே என் மடியில் கனி ஒன்று வந்து விழுந்­தது கண்டேன். அதன் அருமை கருதி அதனை எடுத்து என் இத­யத்­தி­லேயே வைத்துக் கொண்டேன். அதுதான் எம்.ஜி.ஆர்.”

எம்.ஜி.ஆர்’’ என்ற இத­யக்­க­னியை என் இத­யத்­தி­லேயே வைத்துக் கொண்­ட­தற்கு காரணம் வேறு எங்கும் அதனை வைத்துக் கொண்­டி­ருந்­தாலும் எவ­ரேனும் பறித்துக் கொண்டு போய்­வி­டு­வார்கள்”,  “இவரின் இதயம் என்­றுமே அன்பு காட்­டவே பிறந்த இதயம். இவர் தேடிப்போய் மற்­ற­வர்­க­ளு­டைய கண்­ணீரைத் துடைக்கும் கை. மற்­ற­வர்­களை வாழ வைக்கும் கை. இவர் வல்­ல­லுக்­கெல்லாம் வள்ளல் ஆவார். கொள்கைப் பற்­றோடும் குறிக்கோள் நோக்­கோடும் பணி­யாற்றும் திறமை மிக்­கவர். மக்­க­ளுக்கு கலங்­கரை விளக்­க­மா­கவும் ஒளி­வி­ளக்­கா­கவும் விளங்­கிய மாம­னிதர்”.

அன்று கறுப்பு வெள்­ளைப்­ப­ட­மாக இருந்த காலத்தில் தமிழில் முதல் வண்­ணப்­ப­ட­மாக வெளி­வந்த திரைப்­ப­டத்தில் கதா­நா­ய­க­னாக நடித்­ததில் முதல்­வரும் எம்.ஜி.ஆர்.தான் படம் “அலி­பா­பாவும் 40 திரு­டர்­களும்” எனும் இப்­படம் 1956 ஆம் ஆண்டு வெளி­யா­கி­யது.

எம்.ஜி.ஆருக்கு நன்கு தெரிந்த, மனதில் பதிந்த கதை­களை தன் அறி­வுக்­கேற்­ற­வாறு மாற்றி வெற்­றி­கண்­டதில் முதல்வர். அப்­ப­டங்கள் தான் “குலே­ப­கா­வலி” (1955), “பக்தாத் திருடன்” (1956), “மதுரை வீரன்” (1960). அன்­பார்ந்த அழைப்பின் பேரில் இலங்­கைக்கு வருகை தந்த இவ­ருக்கு ஒரு தேசத்­த­லை­வ­ருக்குக் கிடைக்கக் கூடிய வர­வேற்­புக்கு நிக­ரான மரி­யாதை கிடைத்­ததில் முதல்வர்.

எம்.ஜி.ஆரின் முதல் மனை­வியின் பெயர் பார்­கவி தங்­க­மணி. 1938 ஆம் ஆண்டு அவரை திரு­மணம் செய்து கொண்டார். முதல் மனை­வியின் இறப்­புக்குப் பின்னர் 1943 ஆம் ஆண்டு சதா­னந்­த­வதி என்­ப­வரை இரண்­டா­வ­தாக மணந்தார்.

நோயின் கார­ண­மாக இளம் மனை­விகள் இரு­வரும் இறந்­தனர். இதனால் மூன்­றா­வ­தாக நடிகை வீ.என்.ஜானகியை மணந்தார். ஆனாலும் இவர் பெயர் சொல்ல வாரிசு ஒன்­றேனும் இல்­லா­தவர். எனினும் தமி­ழக மக்களையே தன் வாரிசுகளாகக் கருதி பதவியில் அமர்ந்து சேவை செய்தவர் எம்.ஜி.ஆர். இன்று வரை நல்லவர்கள் போற்றும் வல்லவராக திகழ்ந்து வரும் இவர் நீலத்திரைக் கடல் ஓரத்திலே அண்ணாவின் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டு விட்டார். ஆனால் அவர் வார்த்தைகள், எண்ணங்கள் கோடானகோடி உள்ளங்களில் இன்றும் கொலுவிருக்கின்றன!.

(Visited 107 times, 1 visits today)

Post Author: metro