உடலின் தேவைக்கு இன்றியமையாத புரதச்சத்து

(-டாக்டர் ஏ.பீ. ஃபரூக் அப்துல்லா)

 

ருத்­து­வத்தின் தந்தை என போற்­றப்­படும் கிரேக்க ஞானி ஹிப்­போ­கி­ரேட்டஸ் இவ்­வாறு தனது பத்து விதி­களில் பத்­தா­வது விதி­யாக கூறு­கிறார்.

"புரதம் மிக மிக முக்­கி­ய­மான சொல்­லாகும். மாவுச்­சத்­தெல்லாம் அதற்கு பிறகு தான் "

கிட்­டத்­தட்ட 2400 வரு­டங்­க­ளுக்கு முன் வாழ்ந்­த­வ­ருக்கு தெரிந்­தது நமக்கு தெரிய வேண்­டாமோ?

மேலும் தனது விதி 4 இல், "நோயை குணப்­ப­டுத்த முதலில் உணவு முறையை மாற்­றுங்கள்" என்­கிறார். நமது உடலின் தேவைக்கு இன்­றி­ய­மை­யாத சத்து எது என்ற கேள்வி வந்தால் தயங்­காமல் சொல்­லுங்கள் "புர­தச்­சத்து" என்று.

 

மாவுச்­சத்தை குறைத்தால் நம் உடல் அதை தேவைக்­கேற்ப உற்­பத்தி செய்து விடும்.

கொழுப்பை குறைத்தால் கூட நம் கல்­லீரல் கொலஸ்ட்­ேராலை சமைத்­து­விடும்.

அது போக நம்­மிடம் மண்­டி­கி­டக்கும் சேமித்த தொப்­பையில் இருந்து கொழுப்பை கொடுத்­து­வி­டலாம்.

ஆனால், புர­தச்­சத்து என்­பது தினமும் நமது உணவில் இருந்து மட்­டுமே கிடைக்கும் சத்து.

அதுவும் ஒன்­பது தேவை­யான அமினோ அமி­லங்­களை (histidine, isoleucine, leucine, lysine, methionine, phenylalanine, threonine, tryptophan, and valine)நம் உடலால் உற்­பத்தி செய்ய இய­லாது.

ஆகவே, தினமும் நம் உட­லுக்கு தேவை­யான புர­தத்தை உணவின் மூலம் கொடுத்தே ஆக­வேண்டும்.

functional-foods-protein-2

எவ்­வ­ளவு புரதம் தேவை?

தினமும் ஒரு­வ­ருக்கு அவ­ரது எடைக்கு நிக­ரான அளவு புரதம் கிராம்­களில் கிடைக்க வேண்டும்.

(ஒருவர் 50 கிலோ எடை இருந்தால் அவ­ருக்கு 50 கிராம் புரதம் கட்­டாயம் தேவை )

 

நமது உணவு முறையில் புரதம் எவ்­வாறு கிடைக்­கி­றது?

சைவ உண­வர்­க­ளுக்கு புரதம்  வித்துக்கள் மற்றும் பால் பொருட்கள் வழி கிடைக்­கி­றது. காய்­க­றிகள் வழியே கிடைக்கும் புரதம் தர­மா­னது அல்ல.

காய்­க­றி­களில் அள­விலும் குறை­வா­கவே புரதம் இருக்­கி­றது.

அசை­வ உணவு உண்பவர்­க­ளுக்கு புரதம் மாமிசம், முட்டை, மீன் போன்­ற­வற்றில் இருந்து கிடைத்து விடு­கி­றது.

நமது உடலின் மிக முக்­கிய செயல்கள் பல­வற்­றிற்கும், செல்­களின் புதிய கட்­டு­மா­னத்­திற்கும், நமது ஜீன்­களை கொண்­டி­ருக்கும் டி.என்.ஏக்கள் பெருக்­கத்­திற்கும் புரதம் அவ­சியம் தேவை.

ஆகவே, காபோ­வை­த­ரேற்று/ கொழுப்பில் கோட்டை விடலாம் சகோ­தர சகோத­ரி­களே, ஆனால், புர­தச்­சத்தில் கோட்­டை­விட்டு விடக்­கூ­டாது.

 

நாம் உண்ணும் உண­வு­களும் அதில் உள்ள புர­தச்­சத்தும்

 (100கிரா­மிற்கு)அசைவ உணவு உண்­ப­வர்­க­ளுக்கு கோழி /ஆட்டிறைச்சி /மீன் /பன்றிறைச்சி/மாட்டிறைச்சி இது அனைத்­துக்­கு­மான சரா­சரி 25 கிராம்

 

ஒரு கோழி முட்­டையில்- 6 கிராம்

 

சைவ உணவு உண்­ப­வர்­க­ளுக்கு

வித்­துகள் (nuts):

பாதாம் 21கி

வால்நட் 15கி

பிஸ்தா 20கி

 

பால் பொருட்கள்:

பால் 3.1 கி

வெண்ணெய் 0.9 கி

பனீர் 15கி

சீஸ் 20கி

தயிர் 4கி

மோர் 3.3கி

 

உண்ண வேண்­டிய காய்­க­றிகள்:

(அதில் உள்ள புரதம்

கிராம்/ 100 கிரா­மிற்கு )

கோலி பிளவர் (1.9கி)

முட்டை கோஸ்( 1.3கி)

பாகற்காய்(0.8கி)

பீர்க்­கங்காய்(0.5கி)

புட­லங்காய்(0.5 கி)

சுரைக்காய்(0.6கி)

தக்­காளி(0.9கி)

கரட் (0.9கி)

பீட் ரூட்(1.6கி)

வாழைத்­தண்டு

பச்சை & சிவப்பு மிளகாய்(2கி)

பூண்டு (6கி)

வெள்ளை பூசணி(1கி)

வெங்­காயம்(1.1கி)

சுண்­டைக்காய்(0.6கி)

எலு­மிச்சை(1.1கி)

வெண்­டைக்காய்(1.9கி)

தேங்காய்(3.3கி)

கத்­த­ரிகாய்(1கி)

காளான்(1.5கி)

கீரைகள்(2.9கி)

வெள்­ளரி (0.7கி)

இஞ்சி (1.8 கி)

ஆக காய்­க­றி­களில் மிக மிக குறைந்த அளவே புரதம் இருப்­பதை அறி­யலாம்.மேலும் இந்த புர­தங்­களில் நமக்குத் தேவை­யான பல essential amino acids கிடை­யாது.

நமது புரத தேவையை காய்­க­றிகள் மூலம் அடை­வது மிக மிக கடினம்.

எனவே, சைவ உணவு உண்­ப­வர்கள், தங்கள் புர­தச்­சத்தை பால் பொருட்கள் மூலம் கிடைக்­கு­மாறு பார்த்­துக்­கொள்­வது நல்­லது.

ஒரு 80 கிலோ எடை உடைய ஒரு­வ­ருக்கு 80 கிராம் புர­தச்­சத்து தேவை. அதை அவர் எப்­ப­டி­யெல்லாம் அடை­யலாம் என்று பார்ப்போம்.

 

உதா­ரணம் 1 (அசைவம்):

காலை:

3 முட்டை = 3×6 = 18 கிராம்

மதியம்:

100 பாதாம்= 21 கிராம்

மாலை:

400 கிராம் காய்­க­றிகள் = 5 கிராம்

இரவு:

200 கிராம் சிக்கன்

(எலும்பு இல்­லாமல்) = 50 கிராம்

 

மொத்தம் = 94 கிராம் புரதம் எளி­தாக கிடைத்து விடு­கி­றது

 

உதா­ரணம் 2 (நனி­சைவம்):

காலை:

பட்டர் டீ (பால்+பட்டர்) = 4 கிராம்

மதியம்:

பாதாம் 100கிராம் = 21 கிராம்

மாலை:

காய்­க­றிகள்+சீஸ்(100கிராம்)= 20கிராம்

இரவு:

பனீர்(200கிராம்) = 30 கிராம்

மொத்தம் = 75 கிராம்

கிடைத்து விடு­கி­றது

 

உதா­ரணம் 3 (முட்டை சைவம்):

காலை:

4 முட்டை ஒம்லெட் = 24 கிராம்

மதியம்:

பாதாம் 100கிராம் = 21 கிராம்

மாலை:

காய்­க­றிகள்+சீஸ்(100கிராம்)= 20கிராம்

இரவு:

பனீர்(200கிராம்) = 30 கிராம்

மொத்தம் = 95 கிராம்

கிடைத்து விடு­கி­றது

( நனி சைவம் மற்றும் சைவ மக்கள், காய்­க­றி­க­ளுடன் சீஸ் சேர்ப்­பது மிக மிக அவ­சியம்)

தேவைக்கு மேல் சிறிது புரதம் உண்­பதால் உட­லுக்கு கேடு இல்லை.

தேவைக்கு மேல் உள்ள புர­தச்­சத்தை நமது உடல் வெளி­யேற்­றி­விடும்.

தாங்கள் ஜிம்மில் கடு­மை­யாக உடற்பியற்சி செய்பவராக இருந்தாலோ, விளையாட்டுகளில் ஈடுபடுபவராக இருந்தாலோ தங்களின் தேவைக்கு மேல் இருமடங்கு புரதம் எடுத்தாலும் , தசைகள் அவற்றை உபயோகித்து விடும்.

ஆக, தங்களின் எடைக்கு ஏற்றவாறு புரதச்சத்தை சரியான அளவில் எடுக்க வேண்டும்.

health-17-02-2017--750

 

(Visited 419 times, 1 visits today)

Post Author: metro