நாட்டின் சிறந்த வர்த்தக முத்திரைகளை வரிசைப்படுத்தும் ‘இன்டர்பிறேண்ட்’ விருது வழங்கலில் கொமர்ஷல் வங்கி முன்னணியில்

‘இலங்­கையின் மிகச்­சி­றந்த வர்த்­தக முத்­திரை 2017’ நிகழ்வில் அதி கூடிய நிலையைப் பெற்ற தனியார் வங்­கி­யாக கொமர்ஷல் வங்கி தெரி­வா­னது. அண்­மையில் இன்­டர்­பிறேண்ட் நிகழ்வில் இந்த அறி­விப்பு வெளி­யா­னது.

கொமர்ஷல் வங்கி தலைவர் தர்மா தீரரத்ன ஹில்டன் கொழும்பில் இடம்பெற்ற வைபவத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து உரிய விருதைப் பெறுவதைப் படத்தில் காணலாம்.


 

அத்­தோடு நாட்டின் மிகவும் முன்­னணி வர்த்­தக முத்­தி­ரைகள் வரி­சையில் நான்­கா­வது இடத்­தையும் வங்கி பெற்றுக் கொண்­டது. கொமர்ஷல் வங்கி வர்த்­தக முத்­தி­ரைக்கு இன்­டர்­பிறேண்ட் வழங்­கி­யுள்ள பெறு­மதி 20.33 பில்­லியன் ரூபாய்­க­ளாகும்.

இந்த பெறு­மானக் கணிப்­புக்­கான வழி­முறை பற்றி இன்­டர்­பிறேண்ட் குறிப்­பி­டு­கையில், “எமது மதிப்­பீ­டு­களில் மூன்று முக்­கிய அல­குகள் உள்­ளன.

ஒரு வர்த்­தக முத்­திரை உற்­பத்தி அல்­லது சேவையின் நிதிச் செயற்­பாடு, கொள்­வ­னவு முடி­வு­களில் இந்த வர்த்­தக முத்­தி­ரையின் பங்­க­ளிப்பு, இந்த வர்த்­தக முத்­தி­ரையின் போட்­டித்­தன்மை ஸ்திரப்­பாடு என்­ப­னவே அவை. இவை பிரி­வுகள் ரீதி­யான முடி­வு­க­ளோடு முன்­னெ­டுக்­கப்­படும்.

இந்த செயற்­பா­டு­களின் இறு­தியில் எல்லா விட­யங்­களும் ஒன்­றி­ணைக்­கப்­பட்டு வர்த்­தக முத்­தி­ரையின் நிதிப் பெறு­மானம் கணிப்­பி­டப்­ப­டு­கின்­றது எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கையில் மிகவும் சுறு­சு­றுப்­பான செயற்­படு தன்மை கொண்ட வர்த்­தக முத்­தி­ரை­யாக கொமர்ஷல் வங்கி வர்த்­தக இலச்­சினை அதன் கூட்­டாண்மை மற்றும் உற்­பத்தி தொடர்­பாடல் மற்றும் அடி­மட்ட வாடிக்­கை­யாளர் உற­வுகள் என்­ப­ன­வற்றில் ஒரு ஆரோக்­கி­ய­மான சம­நி­லையைப் பேணி வரு­கின்­றது.

பாரம்­ப­ரிய ஊட­கங்­க­ளுக்கு மேல­தி­க­மாக வங்கி சமூக மற்றும் டிஜிட்டல் ஊட­கங்­களில் மற்றும் வாடிக்­கை­யாளர் உறவு நிகழ்­வு­களில் தேசிய மற்றும் பிராந்­திய மட்­டத்தில் மிகவும் சுறு­சு­றுப்­பாக செயற்­ப­டு­கின்­றது.

வங்­கிக்கு பெரும்­பா­லான புலம்­பெ­யர்ந்த இலங்கை வாடிக்கையாளர்களும் கடல் கடந்த நாடுகளில் உள்ளனர். அவர்களுடனும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் ஊக்குவிப்புக்கள் மூலம் தொடர்ச்சியான தொடர்பில் வங்கி உள்ளது.

(Visited 34 times, 1 visits today)

Post Author: metro