2017 இல் தலா ஒரு படத்தில் மட்­டும் நடித்த ஹீரோக்­கள்

2017… நிறைய புது­முக இயக்­கு­நர்­க­ளுக்கு நல்ல வரு­ட­மாக இருந்­தி­ருக்கும். கோலி­வூட்டில் கால் பதித்­தி­ருக்கும் புது­முக நடி­கர்­க­ளுக்கும் சிறந்த வரு­ட­மாக இருந்­தி­ருக்கும். அதே­ச­மயம், சூப்பர் ஸ்டாரினதும் உலக நாய­க­னதும் படங்கள் இந்த வருடம் வெளியாகவில்லை என்­றாலும் அர­சியல் பிர­வே­சத்தால் மக்­க­ளிடம் தொடர்­பி­லேயே இருந்­தனர். ஆனால், இந்த வருடம் பெரும்­பா­லான ஹீரோக்­க­ளுக்கு ஒரே ஒரு படம்தான் வெளி­யாகி உள்­ளது. அந்த ஹீரோக்­களின் பட்­டியல் இதோ…

அஜித்குமார் : – சிவா இயக்­கத்தில் அஜித் நடித்த படம் ‘விவேகம்’. இதே கூட்­ட­ணியில் உரு­வா­கி­வரும் ‘விசு­வாசம்’ படப்­பி­டிப்பு நடை­பெற்று வரு­கி­றது.

சூர்யா : சூர்யா நடிப்பில் இந்த வருடம் ‘சிங்கம் 3’ மட்­டும்தான் வெளி­யா­னது. விக்னேஷ் சிவன் இயக்­கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்­தி­ருக்­கிறார், சூர்யா. இப்­படம் பொங்­க­லுக்கு வெளி­யாக இருக்­கி­றது.

தனுஷ் : ‘வேலை­யில்லா பட்­ட­தாரி- 2’ படத்தில் மட்­டுமே நடித்­துள்ளார். தவிர, ‘ப.பாண்டி’ படத்தின் மூலம் இயக்­கு­ந­ரா­கவும் அறி­முகம் ஆகி­யி­ருக்­கிறார். தற்­போது, ‘வட­சென்னை’, ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ஆகிய தமிழ்ப் படங்­க­ளிலும், ‘தி எக்ஸ்­டார்­டி­னரி ஜார்னி ஆஃப் ஃபகிர்’ என்ற ெஹாலிவூட் படத்­திலும் நடித்­தி­ருக்­கிறார் தனுஷ்.

சிம்பு : ஆதிக் ரவிச்­சந்­திரன் இயக்­கத்தில் ‘அன்­பா­னவன் அச­ரா­தவன் அடங்­கா­தவன்’ மட்­டும்தான் சிம்­புவின் நடிப்பில் வெளி­யான படம். சந்­தானம் நடித்த ‘சக்ைக போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசை­ய­மைப்­பா­ள­ராக அறி­மு­க­மா­கி­யுள்ளார்.

சிவ­கார்த்­தி­கேயன் : மோகன்­ராஜா இயக்­கத்தில் ‘வேலைக்­காரன்’ படத்தில் மட்­டுமே நடித்­தி­ருக்­கிறார். இப்­ப­டத்­திற்குப் பிறகு, பொன்ராம் – சிவ­கார்த்­தி­கேயன் – சூரி எனத் தங்­களின் லக்கி டீமுடன் அத­களம் செய்யக் காத்­தி­ருக்­கிறார்.

ஆர்யா : ‘மஞ்­சப்பை’ ராகவன் இயக்­கத்தில் ஆர்யா நடிப்பில் ‘கடம்பன்’ படம் மட்­டும்தான் வெளி­யா­னது. தற்­போது சந்தோஷ் ஜெயக்­குமார் இயக்­கத்தில் உரு­வா­கிக்­கொண்­டி­ருக்கும் ‘கஜி­னிகாந்த்’ படத்தில் நடித்து வரு­கிறார் ஆர்யா. மேலும், அமீரின் ‘சந்­த­னத்­தேவன்’, சுந்தர்.சி இயக்­கத்தில் ‘சங்­க­மித்ரா’ ஆகிய சில படங்­களும் ஆர்யா வசம் உள்­ளன.

ஜீவா : ‘சங்­கிலி புங்­கிலி கதவ தொற’ எனும் ெஹாரர் கொமடி படம் மட்­டும்தான் ஜீவா நடிப்பில் வெளி­யா­னது. இதனைத் தொடர்ந்து, காளீஷ் இயக்­கத்தில் நிக்கி கல்­ராணி ஜோடி­யாக ‘கீ’ படமும், சுந்தர்.சி இயக்­கத்தில் ‘கல­க­லப்பு -2’ படமும் இவ­ரது கைவசம் இருக்­கின்­றன.

அதர்வா: நடிப்பில் ‘ஜெமி­னி­க­ணே­சனும் சுரு­ளி­ரா­ஜனும்’ படம் வெளி­யா­னது. இவர் நடிப்பில், அடுத்த வருடம் திரைக்கு வர ‘செம போத ஆகாத’, ‘இமைக்கா நொடிகள்’, ‘ருக்­கு­மணி வண்டி வருது’, ‘ஒத்­தைக்கு ஒத்தை’, ‘8 தோட்­டாக்கள்’ கணேஷ் இயக்­க­வி­ருக்கும் புதிய படம்… எனப் பல படங்கள் வரிசை கட்டி நிற்­கின்றன.

விஷால் : மிஷ்கின் இயக்­கத்தில் நடித்த ‘துப்­ப­றி­வாளன்’ படம் மட்­டும்தான், இந்த ஆண்டு விஷாலின் நடிப்பில் வெளி­யான ஒரே தமிழ்­படம். இது­த­விர, மோகன்­லா­லுடன் இணைந்து ‘வில்லன்’ என்ற மலை­யாளப் படத்தில் நடித்தார் விஷால். 2018-ஆம் ஆண்டு இவ­ரது நடிப்பில் ‘இரும்­புத்­திரை’, ‘சண்­டக்­கோழி- 2’ ஆகிய இரு படங்கள் வெளி­யா­க­வி­ருக்­கி­ன்றன.

விஷ்ணு விஷால் : விஷ்ணு விஷால் நடிப்பில் ‘கதா­நா­யகன்’ மட்­டுமே இந்த ஆண்டு வெளி­யா­னது. 2018 -ஆம் ஆண்டு ‘பெண் ஒன்று கண்டேன்’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘சிலுக்­கு­வார்­பட்டி சிங்கம்’ எனப் பல படங்கள் தயார் நிலையில் உள்­ளன.

சித்தார்த் : சித்தார்த், இந்த வருடம் ‘அவள்’ படத்தில் மட்டும் நடித்­துள்ளார். இயக்­குநர் மிலிந்த் ராவுடன் சேர்ந்து ‘அவள்’ படத்­திற்குக் கதையும் எழு­தினார். இப்­போது, ‘சைத்தான் கா பச்சா’ படத்தில் நடித்­துக்­கொண்­டி­ருக்­கிறார்.

சசி­குமார் : சசி­குமார், இந்த வருடம் ‘கொடி­வீரன்’ படத்தில் மட்­டுமே நடித்­துள்ளார். தற்­போது ‘சென்னை உங்­களை அன்­புடன் வர­வேற்­கி­றது’ படத்தின் இயக்­குநர் மரு­து­பாண்­டியன் இயக்கும் ‘அசு­ர­வதம்’ என்ற படத்தில் நடித்­துக்­கொண்­டி­ருக்­கிறார், சசி­குமார்.

அசோக் செல்வன் : 2015-க்கு பிறகு, அசோக் செல்வன் நடித்த படம் ‘கூட்­டத்தில் ஒருத்தன்’. தா.செ.ஞானவேல் இயக்­கிய இந்தப் படத்­திற்கு ப்ரியா ஆனந்த் கதா­நா­ய­கி­யாக நடித்­துள்ளார். இதனைத் தொடர்ந்து, அசோக் செல்வன் நடிப்பில் ‘சில சமயங்களில்’, ‘பிறை தேடிய நாட்கள்’, ‘நெஞ்சமெல்லாம் காதல்’ ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன.

இவர்களை தவிர, அருண் விஜய், அருள்நிதி, ஆதி, நகுல், ஜி.வி.பிரகாஷ், சந்தானம் ஆகியோரும் இந்த வருடம் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 38 times, 1 visits today)

Post Author: metro