சவூதி செஸ் போட்டியில் பங்குபற்ற மறுக்கும் அனா அனா முஸிசுக் , உலக சம்பியன் பட்டங்களை இழக்கிறார் : பெண்கள் இரண்டாந்தர உயிரினங்கள் போன்று நடத்தப்படுவதாக கூறுகிறார்

 

பெண்­களை இரண்­டாந்­தர உயி­ரி­னங்கள் போன்று சவூதி அரே­பியா கரு­து­வதால் அங்கு நடை­பெ­ற­வுள்ள செஸ் உலக சம்­பியன் போட்­டி­களில் பங்­கு­பற்­றப்­போ­வ­தில்லை என இரண்டு தட­வைகள் உலக செஸ் சம்­பி­ய­னான யூக்ரெய்ன் வீராங்­கனை அனா முஸிசுக் தெரி­வித்­துள்ளார்.

‘எனது கொள்­கை­களை நான் கடைப்­பி­டிக்­க­வுள்ளேன்” எனத் தெரி­வித்த அவர், சவூ­தியில் பெண்கள் உரிமை மற்றும் பால் சமத்­துவம் பேணப்­ப­டா­ததால் இரட்டை உலக சம்­பியன் பட்­டங்­களைத் தக்­க­வைக்­கப்­போ­வ­தில்லை என்றார்.

வீதி­களில் தனி­யா­கக்­கூட நடந்து செல்ல அனு­ம­திக்­கப்­பட மாட்டார் என்­ப­தாலும் சவூதி அரே­பி­யா­வுக்கு 27 வய­தான அனா முஸிசுக் செல்­ல­மாட்டார் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வரு­டக்­க­ணக்­காக மூளையை செல­வ­ழித்து செஸ் விளை­யாட்டில் ஈடு­பட்டு மணித்­தி­யா­லக்­க­ணக்­காக பயிற்­சி­பெற்று ஒவ்­வொரு காயாக நன்கு நிதா­னித்து, சிந்­தித்து நகர்த்தி உலக சம்­பி­ய­னாக வேண்­டி­யுள்­ளது. ஆனால், செஸ் விளை­யாட்டை நடத்தும் ஆளும் சபை எடுக்கும் ஒரு அவ­சர முடி­வினால் சொற்ப நேரத்தில் உலகப் பட்டம் பறி­போய்­வி­டு­கின்­றது. அனாவும் இந்த நிலை­யைத்தான் எதிர்­கொண்­டுள்ளார்.

ஒவ்­வொரு வீரர் அல்­லது வீராங்­கனை 15 நிமி­டங்­களில் நகர்­வு­களை பூர்த்தி செய்யும் ரெப்பிட் செஸ் போட்­டி­யிலும் 10 நிமி­டங்­களில் நகர்­வு­களை பூர்த்தி செய்யும் ப்ளிட்ஸ் செஸ் போட்­டி­யிலும் அனா முஸிசுக் நடப்பு உலக சம்­பியன் ஆவார்.

இந்­நி­லையில்,”சவூதி அரே­பியா செல்­வ­தில்லை என நான் தீர்­மா­னித்­ததால் இன்னும் சில தினங்­களில் ஒவ்­வொன்­றாக நான் இரண்டு உலக செஸ் சம்­பியன் பட்­டங்ளை இழக்­க­வுள்ளேன்” என அனா முஸிசுக் தெரி­வித்தார்.

இரண்டு மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் பணப் பரிசைக் கொண்ட உலக செஸ் சம்­பியன் போட்­டியில் பங்­கு­பற்­று­வ­தற்கு இஸ்ரேல் வீர, வீராங்­க­னை­க­ளுக்கு விசா அனு­மதி மறுக்­கப்­பட்­ட­தாலும் ஈரான் மற்றும் கத்தார் வீர, வீராங்­க­னைகள் பங்­கு­பற்­று­வார்­களா என்ற சந்தேகம் நிலவுவதாலும் இப் போட்டி ஏற்கனவே சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

(Visited 106 times, 1 visits today)

Post Author: metro