தந்­திாி­ம­லையில் யானைத் தந்­த­ங்­க­ளுடன் இருவர் கைது

அநுராதரம் தந்திரிமலை பிரதேசத்தில் இரு யானைத் தந்தங்களுடன் இருவரை கைது செய்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட பாரிய சுற்றிவளைப்பின் போதே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட யானைத் தந்தங்ள் சுமார் 4 அடி நீளமானவை என பொலிஸார் தெரிவிக்கின்றன.

சந்தேக நபர்களுக்கு எவ்வாறு குறித்த யானைத்தந்தங்கள் கிடைத்தன என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

(Visited 20 times, 1 visits today)

Post Author: metro