100 கோடி டொலர் வசூலை நெருங்கும் Star Wars: The Last Jedi

ஸ்டார் வோர்ஸ் திரைப்­பட வரி­சையின், புதிய பட­மான Star Wars: The Last Jedi (ஸ்டார் வோர்ஸ் : தி லாஸ் ஜேடி) திரைப்­படம் வசூலில் கலக்கி வரு­கி­றது.

வேல்ட் டிஸ்னி நிறு­வ­னத்­தினால் கடந்த 15 ஆம் திகதி இப்­படம் வெளி­யி­டப்­பட்­டது. கடந்த 26 ஆம் திகதி வரை 844 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை (சுமார் 12,857 கோடி ரூபா) இப்­படம் வசூ­லித்­துள்­ளது. வட அமெ­ரிக்­காவில் (அமெ­ரிக்கா, கனடா) மாத்­திரம் 423 மில்­லியன் டொலர்­களை இப்­படம் வசூ­லித்­துள்­ளது.

வட அமெ­ரிக்­காவில் 400 மில்­லியன் டொலர்­களை மிக வேக­மாக குவித்த திரைப்­ப­டங்­களின் பட்­டி­யலில் இப்­படம் 3 ஆவது இடத்தில் உள்­ளது. 2015 ஆம் ஆண்டு வெளியான ஸ்டார் வோர்ஸ்: தி ஃபோர்ஸ் அவேக்கன் திரைப்­படம் 8 நாட்­க­ளிலும், அதே வருடம் வெளியான ஜூராசிக் வேர்ல்ட் திரைப்­படம் 10 நாட்­க­ளிலும் 400 மில்­லியன் டொலர்­களை வசூ­லித்­தன.

ரியன் ஜோன்சன் இயக்­கிய இப்­ப­டத்தில் மார்க் ஹமில், கெரி பிஷர், அடம் ட்ரைவர், டெய்ஸி ரிட்லி, ஜோன் பொயேகா, ஒஸ்கார் ஐசாக், அன்டி சேுர்கிஸ், லுப்டி என்­யோகோ டொம்னல் கிளீசன், அந்­தனி டேனியல்ஸ், க்வென்­டோலின் கிறிஸ்டி, கெலலி மேரி ட்ரான், லோரா டேர்ன், பெனிக்­கோடெல் டோரோ முத­லானோர் நடித்­துள்­ளனர். 200 மில்­லியன் டொலர் செலவில் இப் ­படம் தயா­ரிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வ­ருட இறு­திக்குள் அதா­வது இவ் வார இறு­திக்குள் 1000 மில்­லியன் (100 கோடி) டொலர் மைல்கல்லை ஸ்டார் வோர்ஸ் : தி லாஸ் ஜேடி கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

(Visited 62 times, 1 visits today)

Post Author: metro