பெண்களின் முன்னேற்றத்துக்கு பங்காற்றியமைக்காக வொண்டர் வுமன் நடிகை கேல் கடோட்டுக்கு விருது

வொண்டர் வுமன் பாத்­தி­ரத்தின் மூலம் புகழ்­பெற்ற நடிகை கேல் கடோட்­டுக்கு, பெண்­களின் முன்­னேற்­றத்­துக்குப் பங்­காற்­றி­ய­மைக்­கான விருது வழங்கி கௌர­விக்­கப்­ப­ட­வுள்ளார்.

அண்­மையில் வெளியான வொண்டர் வுமன் திரைப்­படம் வசூலில் சாத­னை­களைப் படைத்­தது.

 

இஸ்­ரே­லிய முன்னாள் அழ­கு­ரா­ணி­யான கேல் கடோட், வொண்டர் வுமன் எனும் சாகச பாத்­தி­ரத்தில் நடித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில், பெண்­களின் முன்­னேற்­றத்­துக்­காக செயற்­படும் #SeeHer அமைப்­பினால் நடிகை கேல் கடோட்­டுக்கு #SeeHer விருது வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

இவ்­வ­ருடம் திரையில் மாத்­தி­ர­மல்­லாமல், நிஜ வாழ்க்­கை­யிலும் பெண்­க­ளுக்­காக வலி­மை­யான குர­லாக விளங்­கினார் என மேற்­படி அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

 

அடுத்த மாதம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள வைபவத்தில் கேல் கடோட்டுக்கு இவ்விருது வழங்கப்படவுள்ளது.

(Visited 57 times, 1 visits today)

Post Author: metro