சிறுவர் கார்ட்டூன் கதாபாத்திரத்தை போன்று நடித்துப் பார்க்க முயற்சித்த சிறுவன் உயிரிழப்பு

(ரெ.கிறிஷ்­ணகாந்)

சிறுவர் கார்ட்டூன் ஒன்றில் வரும் வீரர் கதா­பாத்­தி­ரத்தை போன்று நடித்துப் பார்க்க முயற்­சித்த சிறுவன் உயி­ரி­ழந்த சம்­ப­வ­மொன்று திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் பத­வி­சி­றி­புர, ஜயந்­தி­வெவ பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ள­தாக பத­வி­சி­றி­புர பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

வீட்டில் எவரும் இல்­லாத நேரத்தில் தனது தாயின் உடை­களை அணிந்து, பெண்­களின் உடை­யி­லேயே தனக்­கான தலைக்­க­வ­ச­மொன்­றையும் தயா­ரித்து அணிந்துகொண்டு தனக்கு பிடித்­த­மான கார்­டூனில் வரும் வீரர் ஒரு­வனின் கதா­பாத்­தி­ரத்தை போன்று நடிப்­ப­தற்கு தயா­ரா­கி­யுள்ளார்.

அதன்­பின்னர் தனது வீட்­டுக்கு முன்­பாக அமைந்­தி­ருந்த மர­மொன்றின் கிளையில் கயிற்றைக் கட்டி, அதனைப் பிடித்துக் கொண்டு மரத்­தி­லி­ருந்து பாய்­வ­தற்கு முயற்­சித்­த­போது, குறித்த கயிறு சிறு­வனின் கழுத்தில் இறு­கி­யதல் அவர் உயி­ரி­ழந்­துள்ளார்.

சிறு­வனின் சடலம் அநு­ரா­த­புரம் போதனா வைத்­தி­ய­சா­லை­யிக்கு எடுத்துச் செல்­லப்­பட்டு மரண பரி­சோ­த­னை கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தன்­மூலம் கழுத்து இறு­கி­ய­மையால் இம்­ ம­ரணம் ஏற்­பட்­ட­தாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

மேற்கொள்ளப்பட்டதன்மூலம் கழுத்து இறுகியமையால் இம் மரணம் ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

(Visited 54 times, 1 visits today)

Post Author: metro