தேர்தல் பிரசாரத்தின்போது விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 625 குர்ஆன் பிரதிகள் சிக்கின – கற்பிட்டியில் சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர்மட்டக் குழு விசாரணை

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பாளர் ஒரு­வரால் தேர்தல் பிர­சார காலப்­ப­கு­தியில் விநி­யோ­கிக்கும் நோக்கில் வைத்­தி­ருந்­த 625 புனித குர்ஆன் பிர­தி­கள் கற்­பிட்டி- கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­தாக புத்­தளம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

கற்­பிட்டி பிர­தேச சபைக்கு போட்­டி­யிடும் ஐக்­கிய தேசியக் கட்சி வேட்­பாளர் ஒரு­வரின் வீட்­டி­லி­ருந்து நேற்று முன்­தினம் இரவு இந்த புனித குர்­ஆன்­களை பொலிஸார் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.

புத்­தளம் மாவட்ட செய­ல­கத்தில் அமைந்­துள்ள பொலிஸ் தேர்தல் காரி­யா­ல­யத்­துக்கு கிடைத்த முறைப்­பாடு ஒன்­றுக்­க­மைய மேற்­கொள்­ளப்­பட்ட சுற்­றி­வ­ளைப்பில் இவை கண்­டு­பி­டிக்கப் பட்­டுள்­ளன.

கற்­பிட்டி பிர­தே­சத்­தி­லுள்ள பள்­ளி­வா­சல்­க­ளுக்கு விநி­யோ­கிப்­ப­தற்­காக, இந்த குர்ஆன் பிர­திகள் தயா­ராக வைக்­கப்­பட்­டி­ருந்­த­தாக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

இந்த நிலையில் இந்த சம்­பவம் தொடர்பில் வடமேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் அபே­சிறி குண­வர்­தன, புத்­தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்­பிக்க சிறி­வர்­தன ஆகி­யோரின் மேற்­பார்­வையில் புத்­தளம் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஜே. ஏ. சந்திர சேனவின் நேரடிக் கட்டுப்பாட்டில் கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

(Visited 25 times, 1 visits today)

Post Author: metro