அரசியலுக்கு வருவதாக ரஜினிகாந்த் அறிவித்தார்; தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக கூறுகிறார்

சுப்பர் ஸ்டார் ரஜி­னிகாந்த் தனது அர­சியல் பிர­வேசம் குறித்து அறி­வித்­துள்ளார். நான் அர­சி­ய­லுக்கு வரு­வது உறுதி. இது காலத்தின் கட்­டாயம். வரும் சட்­டப்­பே­ரவை தேர்­தலில் நான் தனிக்­கட்சி ஆரம்­பித்து தமிழ்­நாடு முழு­வதும் 234 தொகு­தி­க­ளிலும் போட்­டி­யிட முடிவு செய்­துள்ளேன் என ரஜி­னிகாந்த் நேற்று அறி­வித்தார்.


சென்­னையில் உள்ள ராக­வேந்­திரா திரு­மண மண்­ட­பத்தில் தனது ரசி­கர்­களை ரஜினி சந்­தித்து வரு­கிறார். நேற்றைய ஆறா­வது நாள் சந்­திப்பில் தனது அர­சியல் நிலைப்­பாடு குறித்து ரஜினி தெரி­வித்தார்.

இது தொடர்­பாக அவர் பேசு­கையில், அர­சி­ய­லுக்கு வரு­வ­தற்கு எனக்குப் பயம் இல்லை. ஊட­கங்­களைப் பார்த்­துத்தான் பயம். பெரிய பெரிய ஜாம்­ப­வான்கள் எல்லாம் ஊட­கங்­களைப் பார்த்து பயப்­ப­டு­கி­றார்கள். திண­று­கி­றார்கள். நான் இன்னும் குழந்தை. எனக்கு எப்­படி இருக்கும்?

நான் ஏதா­வது பேசினால் உடனே விவா­த­மா­கி­வி­டு­கி­றது. இரண்டு நாட்­க­ளுக்கு முன்னர் ஓர் ஊடக நிருபர் உங்கள் கொள்­கைகள் என்ன என்று கேட்டார். எனக்கு தலை சுற்­றி­விட்­டது. நைஸ் நைஸ் என்றேன்.

சோ (மறைந்த நடி­கரும் துக்ளக் சஞ்­சிகை ஆசி­ரி­ய­ரு­மான சோ. ராம­சாமி) மீடி­யா­விடம் ஜாக்­கி­ர­தையா இருங்க என்று ஏற்­கெ­னவே என்­னிடம் கூறி­யி­ருக்­கிறார். அவரை ரொம்ப மிஸ் பண்­ணு­கிறேன். அவர் பக்­கத்தில் இருந்­தி­ருந்தால் 10 யானை பல­மாக இருந்­தி­ருக்கும். அவர் ஆத்மா என்றும் என்­னுடன் இருக்கும்.


நான் எல்லாம் பண்­ணிட்டேன். இனி அம்பு விடு­ற­துதான் பாக்கி. அர­சி­ய­லுக்கு வரு­வது உறுதி. இது காலத்தின் கட்­டாயம். வரும் சட்­டப்பே­ரவைத் தேர்­தலில் நான் தனிக்­கட்சி ஆரம்­பித்து தமிழ்­நாடு முழு­வதும் 234 தொகு­தி­க­ளிலும் நிற்க முடிவு செய்­துள்ளேன். உள்­ளாட்சித் தேர்­தலில் நிற்கப் போவ­தில்லை.

 

அர­சி­ய­லுக்கு பணத்­துக்­காக, புக­ழுக்­காக வரப் போவ­தில்லை. பத­விக்­காக என்றால் 1996 லேயே வந்­தி­ருப்பேன். 45 வய­தி­லேயே எனக்கு பதவி ஆசை வர­வில்லை. 68 வயதில் பதவி ஆசை வருமா? அப்­படி வந்தால் நான் ஆன்­மி­க­வாதி என்று சொல்­வ­தற்கே தகு­தி­யற்­றவன் ஆகி­வி­டுவேன்.

அர­சியல் ரொம்ப கெட்­டுப்­போய்­விட்­டது. ஜன­நா­யகம் சீர்­கெட்டுப் போய்­விட்­டது. தமி­ழ­கத்தில் நடந்த சில அர­சியல் சம்­ப­வங்கள் ஒவ்­வொரு தமி­ழ­னையும் தலை­கு­னிய வைத்­து­விட்­டது. ஒவ்­வொரு மாநில மக்­களும் நம்மைப் பார்த்து சிரிக்­கி­றார்கள்.
இந்த நேரத்தில் முடி­வெ­டுக்­க­வில்­லை­யென்றால் எனக்கு வாழ்நாள் முழுக்க குற்ற உணர்ச்சி இருக்கும்.

சாதி,மத, பேத­மற்ற ஆன்­மிக அர­சியல் செய்­வதே என் இலக்கு. இது சாதா­ரண விஷ­ய­மில்லை. ஒரு கட்சி ஆரம்­பித்து தேர்­தலில் நின்று ஆட்சி அமைப்­பது சாதா­ரணம் இல்லை என்­பது எனக்குத் தெரியும். கடவுள் அருள், மக்கள் ஆத­ரவு இரண்டும் எனக்கு கிடைக்கும் என்ற முழு நம்­பிக்கை இருக்­கி­றது.

எனக்குத் தொண்­டர்கள் வேண்டாம், காவ­லர்கள் வேண்டும். காவ­லர்­களைக் கண்­கா­ணிக்கும் பிர­தி­நி­திதான் நான். சட்­டப்­பே­ரவை தேர்­த­லுக்கு முன்பு கட்சி ஆரம்­பித்து செயல்­திட்­டங்கள் வகுப்போம். சொன்ன வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றா­விட்டால் மூன்று ஆண்­டு­களில் பதவி வில­குவோம். என் மந்­திரம் உண்மை, உழைப்பு, உயர்வு என்றார்.

1996 ஆம் ஆண்டு தமி­ழக சட்­ட­சபை மற்றும் இந்­திய நாடா­ளு­மன்ற, தேர்­த­லின்­போது, தி.மு.­க.­வுக்கு ஆத­ர­வாக ரஜினி குரல் கொடுத்தார். ஜெய­ல­லிதா மீண்டும் ஆட்­சிக்கு வந்தால் தமி­ழ­கத்தை ஆண்­ட­வ­னால்­கூட காப்­பாற்ற முடி­யாது என அவர் கூறினார். அத்­தேர்­தலில் தி.மு.­க.­ கூட்­டணி மாபெரும் வெற்றி பெற்­றது.

பல்­வேறு தரு­ணங்­களில் ரஜினி அர­சி­ய­லுக்கு வருவார் என எதிர்­பார்ப்பு நில­வி­ய­போ­திலும் அவர் அர­சி­யலில் ஈடு­பட விருப்பம் தெரி­விக்­க­வில்லை. எனினும் கடந்த 12 ஆம் திகதி தனது 67 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடிய ரஜினிகாந்த் தற்போது தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் சினிமா, நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் பல ரும் தமது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

 

அ.தி­.மு.­க.வை வெல்ல யாரும் பிறக்­க­வில்லை  -முதல்வர் பழ­னி­சாமி

ரஜி­னிகாந்த் அர­சியல் பிர­வேசம் குறித்து அறி­வித்­த­தை­ய­டுத்து செய்­தி­யா­ளர்கள் தமி­ழக முதல்வர் எடப்­பாடி பழ­னி­சா­மி­யிடம் கேள்வி எழுப்­பினர்.
அப்­போது, ‘ஜன­நா­யக நாட்டில் அனை­வ­ருக்கும் அர­சி­ய­லுக்கு வரும் உரிமை உள்­ளது. நடிகர் ரஜி­னி­காந்த் என்ன பேசி­யி­ருக்­கிறார் என்ற முழு­வி­வரம் எனக்குத் தெரி­ய­வில்லை. அவ­ரது பேச்சைக் கேட்ட பிறகே கருத்து கூற முடியும்’.
இப்­போ­துதான் அவர் அர­சி­ய­லுக்கு வரு­வ­தாகத் தெரி­வித்­தி­ருக்­கிறார். 2021இல் நடை­பெறும் சட்­ட­மன்றத் தேர்­தலில் போட்­டி­யி­டப்­போ­வ­தாக தெரி­வித்­துள்ளார். இரு­பெரும் தலை­வர்கள் உரு­வாக்­கிய அதி­முக இன்று உயி­ரோட்­ட­மாக இருக்­கி­றது. அதி­மு­கவை வெல்ல யாரும் பிறந்­த­து­மில்லை, பிறக்­கப்­போ­வ­து­மில்லை’ என்றார் என பதி­ல­ளித்தார்.

கமல் வாழ்த்து
நடிகர் கமல்­ஹாசன், தன் டுவிட்டர் பக்­கத்தில், ”சகோ­தரர் ரஜி­னியின் சமூக உணர்­வுக்கும் அர­சியல் வரு­கைக்கும் வாழ்த்­துக்கள். வருக வருக” என்று தெரி­வித்­துள்ளார்.

தி.மு­.க­.வுக்கு எந்த சாத­கமோ, பாத­கமோ கிடை­யாது – மு.க.ஸ்டாலின்
ரஜினி அர­சி­ய­லுக்கு வரு­வதால் திமு­க­வுக்கு எந்த சாத­கமோ, பாத­கமோ கிடை­யாது என்று அக்­கட்­சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறி­யுள்ளார். ரசி­கர்­களின் எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு ரஜினி முற்­றுப்­புள்ளி வைத்­துள்ளார். அவ­ருக்கு என் வாழ்த்­துகள் எனவும் ஸ்டாலின் தெரி­வித்­துள்ளார்.

தமி­ழிசை சவுந்­த­ர­ராஜன் வர­வேற்பு
பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமி­ழிசை சவுந்­த­ர­ராஜன் தன் ட்விட்டர் பக்­கத்தில் ‘ஊழ­லற்ற, நல்­லாட்சி என்ற நோக்­கத்­துடன் ரஜி­னிகாந்த் அர­சி­ய­லுக்கு வந்­தி­ருப்­பதை வர­வேற்­கிறேன். ஊழ­லற்ற நல்­லாட்சி என்­ப­துதான் பாஜ­கவின் ஒரே நோக்கம்’ எனத் தெரி­வித்­துள்ளார்.

 

(Visited 52 times, 1 visits today)

Post Author: metro