பயிற்சிகளின்போது பாட்டு கேட்டால் வீரர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவர் – பயிற்­றுநர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க

(நெவில் அன்­தனி)

சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் சோபிக்கத் தவ­றி­வரும் இலங்கை கிரிக்கெட் அணியை புத்­தாண்டில் உய­ரிய நிலைக்கு இட்டுச் செல்ல உறு­தி­பூண்­டுள்ள புதிய தலைமைப் பயிற்­றுநர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க, வீரர்கள் ஒழுக்கம் பேணு­வதை வலி­யு­றுத்­தி­யுள்ளார். அத்­துடன் அணித் தேர்­விலும் தனக்கு அதி­காரம் இருக்க வேண்டும் எனக் கோரி­யுள்ளார்.

உலக கிண்ண சம்­பியன் பட்­டத்தை சுவீ­க­ரித்து 21 வரு­டங்கள் ஆன நிலையில் 2017இல் மூவகை கிரிக்கெட் போட்­டி­க­ளிலும் மோச­மான பின்­ன­டைவைக் கண்ட இலங்கை அணியை இன்னும் இரண்டு வரு­டங்­களில் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ணப் போட்­டிக்கு தயார்­ப­டுத்­து­வதில் ஹத்­து­ரு­சிங்க அக்­க­றை­யுடன் செயற்­ப­ட­வுள்ளார். இதனை இலக்­காகக் கொண்டு ஒழுக்க விதி­களைக் கடு­மை­யாக்­க­வுள்­ள­தாக அவர் கூறினார்.

பயிற்­சி­க­ளின்­போது வீரர்கள் பாட்டு கேட்­ப­தாக வெளி­யாகும் தக­வல்கள் குறித்து ஹத்­து­ரு­சிங்­க­விடம் சுட்­டிக்­காட்­டி­ய­போது, ‘‘பாட்டு கேட்டால் அவர்கள் வீட்­டுக்­குத்தான் போக­வேண்டும்’’ என்றார். ‘‘எனக்கு ஒழுக்கம் மிகவும் முக்­கியம். வீரர்கள் அதனைக் கடைப்­பி­டிப்­பது அவ­சியம். பயிற்­சி­களின் வீரர்கள் பாட்டு கேட்­ப­தாக இருந்தால் அவர்கள் வீட்­டுக்கு அனுப்­பப்­ப­டு­வார்கள்’’ என ஹத்­து­ரு­சிங்க வீரர்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுத்தார்.

அத்­துடன் அணித் தெரிவில் தனக்கு அதி­காரம் வழங்­கப்­ப­ட­வேண்டும் எனவும் அவர் வலி­யு­றுத்­தினார். ‘‘இறுதி அணியை (பதி­னொ­ருவர்) தெரிவு செய்யும் பொறுப்பு எனக்கு வழங்­கப்­ப­ட­வேண்டும். தற்­போ­துள்ள விளை­யாட்­டுத்­துறை விதி­களின் பிர­காரம் தேர்­வு­களில் பயிற்­றுநர் தலை­யிட முடி­யாது.

அது எனக்கு ஒத்­து­வ­ராது. பயிற்­று­ந­ராக இருந்­து­கொண்டே தேர்­வா­ள­ரா­கவும் செயல்­பட எனக்கு அதி­காரம் வழங்­கப்­ப­ட­வேண்டும் என நான் கோரி­யுள்ளேன். அது குறித்து கவனம் செலுத்­தப்­ப­டு­கின்­றது’’ என்றார் ஹத்­து­ரு­சிங்க. இந்த வருடம் மூவகை கிரிக்கெட் அரங்­கிலும் 57 போட்­டி­களில் விளை­யா­டிய இலங்கை 40 போட்­டி­களில் தோல்வி அடைந்­த­துடன் 14இல் மாத்­தி­ரமே வெற்றிபெற்றது.புத்தாண்டில் புதிய பயிற்றுநர் சந்திக்க ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பில் இலங்கை அணி உயரிய நிலையைநோக்கி நகரும் என இலங்கை ரசிகர்கள் நம்பு கின்றனர்.

(Visited 55 times, 1 visits today)

Post Author: metro