1993 : கிளாலி படு­கொ­லைகள் இடம்­பெற்­றன

வரலாற்றில் இன்று…

ஜனவரி – 02

 

1492 : ஸ்பெயினில் முஸ்­லிம்­களின் ஆளு­கைக்­குட்­பட்ட கடைசி நக­ர­மான கிர­னடா சர­ண­டைந்­தது.

1757 : இந்­தி­யாவின் கல்­கத்தா நகரை பிரிட்டன் கைப்­பற்­றி­யது.

1782 : கண்டி இராச்­சி­யத்தின் இரண்­டா­வது நாயக்க வம்ச மன்­ன­ரான கீர்த்தி ஸ்ரீ இரா­ஜ­சிங்கன் இறந்தார்.

1793 : ரஷ்­யாவும் பிரஸ்­யாவும் (தற்­போ­தைய ஜேர்­ம­னியின் ஒரு பிராந்­தியம்) போலந்தை பங்­கிட்­டன.

1893 : வட அமெ­ரிக்­காவில் ரயில் பாதை­களில் நேரத்தை அள­விடும் குரோ­னோ­ மீட்­டர்கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன.

1905 : ரஷ்யக் கடற்­ப­டை­யினர் சீனாவின் போர்ட் ஆதரில் ஜப்­பா­னி­ய­ரிடம் சர­ண­டைந்­தனர்.

1921 : ஸ்பெயினின் சாண்டா இசபெல் கப்பல் மூழ்­கி­யதால் 244 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1941 : இரண்டாம் உலகப் போரில் பிரிட்­டனின் வேல்ஸில் லாண்டாஃப் தேவா­லயம் ஜெர்­ம­னி­யரின் குண்­டு­வீச்சில் பலத்த சேதம் அடைந்­தது.

1942 : இரண்டாம் உலகப் போரில் பிலிப்­பைன்ஸின் மணிலா நகரம் ஜப்­பா­னி­ய­ரினால் கைப்­பற்­றப்­பட்­டது.

1955 : பனா­மாவின் ஜனா­தி­பதி ஜோசே அன்­ரோ­னியோ ரெமோன் படு­கொலை செய்­யப்­பட்டார்.

1959 : சந்­தி­ர­மண்­டல ஆய்­வுத்­திட்­டத்தின் முத­லா­வது செய்­ம­தி­யான லூனா 1, சோவியத் ஒன்­றி­யத்தால் விண்­ணுக்கு ஏவப்­பட்­டது.

1971 : கிளாஸ்­கோவில் கால்­பந்­தாட்ட மைதானம் ஒன்றில் இடம்­பெற்ற விபத்தில் சிறு­வர்கள் உட்­பட 66 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1982 : சோமா­லிய அர­சுக்கு எதி­ரான தமது முத­லா­வது இரா­ணுவ நட­வ­டிக்­கையை சோமா­லிய தேசிய இயக்கம் தொடங்­கி­யது. சோமா­லி­யாவின் வட­ப­கு­தியில் அர­சியல் கைதி­களை விடு­வித்­தனர்.

1993 : கிளாலி கடல் நீரே­ரியில் பய­ணித்த பொது­மக்கள் மீது கடற்­ப­டை­யினர் நடத்­திய தாக்­கு­தலில் சுமார் 50 பேர் இறந்­தனர்.

1999 : அமெ­ரிக்­காவின் விஸ்­கொன்சின் மாநி­லத்தில் இடம்­பெற்ற பலத்த பனிப்­பு­யலில் சிக்கி 68 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2006 : மன்­னாரில் இலுப்­பைக்­க­ட­வையில் இடம்­பெற்ற இலங்கைப் படை­யி­னரின் வான் தாக்­கு­தலில் 8 சிறு­வர்கள் உட்­பட 15 பொது­மக்கள் கொல்­லப்­பட்­டனர். 40 பேர் படு­கா­ய­ம­டைந்­தனர்.

2008 : விடு­தலைப் புலி­க­ளுக்கும் இலங்கை அர­சுக்­கு­மி­டையே 2002 இல் கைச்­சாத்­தி­டப்­பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு அறிவித்தது.

2016 : சவூதி அரேபியாவில் ஷியா மதப் பிரசாரகர் ஷேய்க் நிம்ர் அல் நிம்ர் உட்பட 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

(Visited 39 times, 1 visits today)

Post Author: metro