ஆஸி. பகிரங்க டென்னிஸில் செரீனா விளையாடுவது சந்தேகம்?

குழந்தை பிர­ச­வித்த பின்னர் டென்னிஸ் விளை­யாட்டில் முதல் தட­வை­யாக பங்­கு­பற்றி தோல்­வியை சந்­தித்த செரீனா வில்லிம்ஸ், அவஸ்­தி­ரே­லிய பகி­ரங்க டென்னிஸ் போட்­டியில் பங்­கு­பற்­று­வது சந்­தேகம் என்ற தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

அவுஸ்­தி­ரே­லிய பகி­ரங்க டென்னிஸ் போட்­டியில் கடந்த வருடம் 2 மாத கர்ப்­பி­ணி­யாக சம்­பி­யனான செரீனா வில்­லியம்ஸ், அதன் பின்னர் பிர­தான போட்­டிகள் எதிலும் விளை­யா­ட­வில்லை. கடந்த செப்­டெம்பர் மாதம் தாயான செரீனா, டிசம்பர் மாதத்­தி­லி­ருந்து பயிற்­சி­களில் ஈடு­பட ஆரம்­பித்தார்.
தொடர்ந்து துபாயில் கடந்த மாத இறு­தியில் நடை­பெற்ற முபா­தாலா கண்­காட்சி டென்னிஸ் போட்­டியில் பிரெஞ்சு பகி­ரங்க டென்னிஸ் சம்­பியன் ஜெலினா ஒஸ்­டா­பென்­கோ­விடம் 1 – 2 என்ற செட்கள் அடிப்­ப­டையில் தோல்வி அடைந்தார்.

இந்தத் தோல்­வியை அடுத்து பேசிய 36 வய­தான செரீனா, ‘‘டென்னிஸ் விளை­யா­டு­வது இல­கு­வா­ன­தல்ல. அது சவால் மிக்­கது. சில காலம் நான் டென்னிஸ் அரங்கில் தோன்­றா­ததால் இர­சி­கர்­களின் ஆர­வா­ரங்­களைத் தவ­ற­விட்­டு­விட்டேன். இப்­போது நான் ஒரு குழந்­தைக்கு தாய். டென்னிஸ் களத்தில் ஆடும்­போது குழந்­தையின் நினைப்பைத் தவிர்க்க முடி­ய­வில்லை. அதனால் அடிக்­கடி குழந்தை இருக்கும் பக்­கத்தை திரும்பித் திரும்பிப் பார்த்­துக்­கொண்­டி­ருந்தேன்’’ என்றார்.

மாபெரும் டென்னிஸ் (கிராண்ட் ஸ்லாம்) போட்­டி­களில் 23 தடவைகள் சம்­பியன் பட்­டங்­களை வென்­றுள்ள செரீ­னா­விடம் அவஸ்­தி­ரே­லிய பகி­ரங்க டென்னிஸ் போட்­டி­களில் விளை­யா­டு­வீர்­களா எனக் கேட்­ட­போது, ‘‘டென்னிஸ் போட்­டியில் மீள் பிர­வேசம் செய்ய முழு­மை­யாகத் தயா­ராகி விட்­டேனா என்­பது எனக்குப் புரி­ய­வில்லை. சம்­பியன் பட்­டத்தை தக்­க­வைத்­துக்­கொள்­வ­தற்­கான வலு­வுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்’’ என பதிலளித்தார். அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில் விளையாடுவதுபற்றி அவர் உறுதியாக எதனையும் கூறவில்லை.

(Visited 18 times, 1 visits today)

Post Author: metro