இசை­யில் சத­ம­­டித்த இமான்

இன்­றைய முன்­னணி இசையமைப்­பா­ளர்­களில் ஒருவர் டி.இமான். மீடியம் பட்ஜெட் படங்­களின் மோஸ்ட் ேவாண்டட் இசையமைப்­பாளர். “எனக்கு நேரம் இல்லை” என்று படங்­களை தவிர்க்­கிற அள­விற்கு வளர்ந்து நிற்­கிறார். தற்­போது அவர் இசைய மைத்து வரும் ‘டிக் டிக் டிக்’ படம் அவ­ருக்கு 100 ஆவது படம். பள்­ளியில் படிக்­கும்­போதே இசை மீது ஆர்வம் கொண்ட இமான்.

முறைப்­படி இசை கற்று 15 வயதில் கீ போர்ட் பியேளர் ஆனார். நடிகை குட்­டி­பத்­மினி கிருஷ்­ண­தாஸி என்ற சின்­னத்­திரை தொட­ருக்கு இமானை இசையமைப்­பாளர் ஆக்கினார். அதன்­பி­றகு ‘சிங்­காரம்’, ‘கோலங்கள்’, ‘முகங்கள்’, ‘அகல்­யா’, ‘கல்கி’, ‘அல்லி ராஜ்யம்’, ‘திரு­மதி செல்வம்’, ‘வசந்தம்’, ‘உற­வுகள்’, ‘செல்­லமே’ உள்­ளிட்ட பல சீரி­யல்­க­ளுக்கு இசை அமைத்தார்.

அதன்­பி­றகு ‘காதலே சுவாசம்’ என்ற படத்தின் மூலம் திரைப்­பட இசையமைப்­பாளர் ஆனார். தமிழன், சேனா, விசில் கிரி, ஆணை, ஏபி­சிடி, அன்பே வா, தக­தி­மிதா, தலை­ந­கரம், குஸ்தி என மீடியம் பட்ஜெட் படங்­களின் இசை அமைப்­பாளர் ஆனார். பிரபு சாலமன் இயக்­கிய மைனா படம் இமானை அடுத்த கட்­டத்­திற்கு கொண்டு சென்­றது. அந்தப் படத்தின் வெற்­றியும் பாடல்­களின் வெற்­றியும் அவரை பெரிய பட்ஜெட் படங்­களின் இசை அமைப்­பா­ள­ராக்­கி­யது.

கும்கி, வருத்­தப்­ப­டாத வாலிபர் சங்கம், ஜில்லா, சிகரம் தொடு, ஜீவா, ரோமியோ ஜூலியட், மிருதன் என தொடர் ஹிட்­டு­களை கொடுத்தார்.

தற்­போது வணங்­கா­முடி, போகி, நான் தான் சிவா, டிக் டிக் டிக் படங்­க­ளுக்கு இசை அமைத்து வரு­கிறார். பட்­டி­யல்­படி டிக் டிக் டிக் 100 ஆவது படம். ெஹாலிவூட் பாணியில் தயா­ரா­கி வரும் விண்வெளி பயணக்கதையான இதில் இமான் தனது இசையின் அடுத்த பரிமாணத்தை தரவிருக்கிறார்

(Visited 49 times, 1 visits today)

Post Author: metro