புத்­தாண்டு கால கொண்­டாட்­டங்­களின் போது காய­ம­டைந்த 512 பேரில் 194 பேர் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் தங்­கி­யி­ருந்து சிகிச்சை!

(ரெ.கிறிஷ்­ணகாந்)

புத்­தாண்டு ஆரம்­ப­மா­கும்­போது பல்­வேறு அனர்த்­தங்­களில் காய­ம­டைந்து கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்கப்பட்­ட­வர்­களின் எண்­ணிக்கை கடந்த வரு­டத்­துடன் ஒப்­பி­டு­கையில் அதி­க­ரித்­துள்­ள­தாக திடீர் விபத்து பிரிவின் தாதி அதி­காரி புஷ்பா ரம்­யானி டி சொய்ஸா தெரி­வித்­துள்ளார்.

இந்த அனர்த்­தங்­களில் அதி­க­மா­னவை வீதி­ வி­பத்­துகள் மற்றும் வீடு­களில் ஏற்­படும் விபத்­துக்களே அதிக பங்­கு­வ­கிக்கின்ற அதே­வேளை வன்­முறை மற்றும் பட்­டாசு பொருட்­களால் ஏற்­பட்ட அனர்த்­தங்­களில் காய­ம­டைந்­த­வர்கள் எண்­ணிக்­கையில் கடந்த வரு­டத்தைவிட இவ்­வ­ருடம் வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

பல்­வேறு அனர்த்­தங்கள் கார­ண­மாக கடந்த 30 மற்றும் 31 ஆம் திக­தி­களில் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் 512 பேர் சிகிச்சை பெற்­றுள்­ள­தா­கவும் அவர்­களில் 194 பேர் தங்­கி­யி­ருந்து சிகிச்சை பெறு­வ­தா­கவும் தெரி­வித்­துள்ளார். வீழ்ந்து காயப்­பட்ட 161 பேரும் வீதியில் ஏற்­பட்ட பல்­வேறு விபத்­து­களில் 117 பேரும், வீடு­களில் இடம்­பெற்ற விபத்துக்களில் 68 பேரும் இவ்­வாறு காய­ம­டைந்­துள்­ளனர்.

இதே­வேளை, கடந்த 31 மற்றும் 30 ஆகிய திக­தி­களில் வன்­மு­றை­களால் 42 பேரும், பட்­டாசு விபத்­து­களால் 29 பேரும் காய­ம­டைந்­ததன் கார­ண­மாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக திடீர் விபத்து பிரிவின் தாதி அதிகாரி புஷ்பா ரம்யானி டி சொய்ஸா தெரிவித்துள்ளார்.

(Visited 17 times, 1 visits today)

Post Author: metro