பொங்கல் தினத்­தன்று சம்­பி­யனைத் தீர்­மா­னிக்கும் கடைசிப் போட்­டியில் றினோன் – கலம்போ எவ்.சி.

(நெவில் அன்­தனி)

இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளனம் நடத்தும் 2017 டயலொக் சம்­பியன்ஸ் லீக் கால்பந்­தாட்­டத்தின் சம்­பி­யனைத் தீர்­மா­னிக்கும் றினோன், கலம்போ எவ்.சி. அணி­க­ளுக்கு இடை­யி­லான போட்டி தைப்­பொங்கல் திரு­நா­ளான எதிர்­வரும் 14ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. சம்­பி­யனைத் தீர்­மா­னிக்கும் போட்­டியை யாழ்ப்­பா­ணத்தில் நடத்­து­வ­தற்கு போட்டி ஏற்­பாட்­டா­ளர்­களும் அனு­ச­ர­ணை­யா­ளர்­க­ளான டயலொக் ஆசி­யாட்டா நிறு­வ­னமும் ஏற்­க­னவே திட்­ட­மிட்­டி­ருந்­தன.

ஆனால், தற்­போ­தைய சூழ்­நி­லையில் இப் போட்­டியை யாழ்ப்­பா­ணத்தில் நடத்­து­வது உசி­த­மில்லை என இரண்டு தரப்­பி­னரும் தீர்­மா­னித்­ததை அடுத்து இப் போட்டி கொழும்பு குதிரைப் பந்­தயத் திடலில் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. இதற்கு அனு­ச­ர­ணை­யா­ளர்­களும் இரண்டு அணி­க­ளது நிரு­வா­கத்­தி­னரும் இணங்­கி­யுள்­ள­தாக இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளனத் தலைவர் அநுர டி சில்வா தெரி­வித்தார்.

இப் போட்­டிக்கு முன்­ப­தாக டயலொக் சம்­பியன்ஸ் லீக்கில் எஞ்­சி­யி­ருக்கும் மேலும் இரண்டு போட்­டி­களை இவ் வாரம் நிறைவு செய்­வ­தற்கு இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளனம் ஏற்­பா­டு­களை செய்­து­வ­ரு­கின்­றது.

நியூ யங்ஸ், குரு­நாகல் பெலிக்கன்ஸ், சோண்டர்ஸ், சம்­பந்­தப்­பட்ட போட்­டி­களே எஞ்­சி­யுள்­ளன. இதே­வேளை, றினோன் கழகம் தனது 16 போட்­டி­களில் 12 வெற்­றிகள், 4 வெற்­றி­தோல்­வி­யற்ற முடி­வு­க­ளுடன் 40 புள்­ளி­களைப் பெற்று முத­லி­டத்தில் இருக்­கின்­றது.

நடப்பு சம்­பியன் கலம்போ எவ்.சி. தனது 16 போட்­டி­களில் 11 வெற்­றிகள், 4 வெற்­றி­தோல்­வி­யற்ற முடி­வுகள், ஒரு தோல்வி என்ற பேறு­பே­று­க­ளுடன் 37 புள்­ளி­களைப் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்­கின்­றது.

இந்த இரண்டு அணி­களும் சம்­பந்­தப்­பட்ட கடைசி லீக் போட்டி வெற்­றி­தோல்­வி­யின்றி முடி­வ­டைந்தால் றினோன் கழகம் சம்­பி­ய­னா­கி­விடும். அல்­லது இப் போட்­டியில் வெற்­றி­பெறும் அணி டயலொக் வெற்றிக் கிண்­ணத்தை சுவீ­க­ரிக்கும். கலம்பே எவ். சி. வெற்­றி­பெற்றால் 40 புள்­ளி­க­ளுடன் நிகர கோல்கள் வித்­தி­யாச அடிப்­ப­டையில் சம்­பி­ய­னாகும்.

இவ் வருட டயலொக் சம்­பியன்ஸ் லீக் கால்­பந்­தாட்டப் போட்­டியில் 18 கழ­கங்கள் பங்­கு­பற்­றி­ய­துடன் லீக் சுற்று முடிவில் கடைசி நான்கு கழகங்கள் முதலாம் பிரிவுக்கு தரமிறக்கப்படவுள்ளன. முதலாம் பிரிவில் இவ் வருடம் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் டயலொக் சம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாட தரமுயர்த்தப்படும்.

(Visited 27 times, 1 visits today)

Post Author: metro