2004 : எகிப்திய விமான விபத்தில் 148 பேர் பலி

வரலாற்றில் இன்று…

ஜனவரி – 03

 

1431 : பிரெஞ்சு வீராங்­க­னை­யான 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் கைது செய்­யப்­பட்டு பியேர் கவுச்சோன் ஆய­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டார்.

1496 : இத்­தா­லிய அறிஞர் லியானார்டோ டா வின்சி, தனது பறக்கும் இயந்­திரம் ஒன்றை சோத­னை­யிட்டார். எனினும், அது வெற்­றி­ய­ளிக்­க­வில்லை.

1833 : ஆர்­ஜென்­டீ­னா­வுக்கு அரு­கி­லுள்ள போக்­லாந்து தீவு­களை பிரித்­தா­னியா கைப்­பற்­றி­யது.

1888 : 91 செ.மீ முறிவுத் தொலை­நோக்கி முதன்­மு­றை­யாக கலி­போர்­னி­யாவில் உப­யோ­கிக்­கப்­பட்­டது. இதுவே அந்­நே­ரத்தில் உலகின் மிகப் பெரும் தொலை­நோக்கி ஆகும்.

1921 : ஆர்­மே­னி­யா­வுடன் சமா­தான உடன்­பாட்­டுக்கு துருக்கி ஒப்­புக்­கொண்­டது.

1925 : இத்­தா­லியின் ஆட்சி அதி­காரம் முழு­வதும் தன்­னிடம் உள்­ள­தாக முசோ­லினி அறி­வித்தார்.

1932 : இந்­தி­யாவில் மகாத்மா காந்தி மற்றும் வல்­லபாய் பட்டேல் ஆகி­யோரை பிரித்­தா­னியர் கைது செய்­தனர்.

1947 : அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற அமர்வு முதற்­த­ட­வை­யாக தொலைக்­காட்­சியில் காண்­பிக்­கப்­பட்­டது.

1956 : ஈபிள் கோபு­ரத்தில் ஏற்­பட்ட தீயினால் கோபு­ரத்தின் மேற்­ப­குதி சேத­ம­டைந்­தது.

 

1957 : முத­லா­வது மின்­க­டி­கா­ரத்தை ஹமில்ட்டன் வோட்ச் கம்­பனி அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

1958 : மேற்­கிந்­தியத் தீவு­களின் கூட்­ட­மைப்பு அமைக்­கப்­பட்­டது.

1959 : அலாஸ்கா, ஐக்­கிய அமெ­ரிக்­காவின் 49ஆவது மாநி­ல­மா­னது.

1961 : கியூ­பா­ வு­ட­னான ராஜ­தந்­திர உற­வு­களை அமெ­ரிக்க அரசு முறித்­துக் ­கொண்­டது.

1961 : பின்­லாந்தில் இடம்­பெற்ற விமான விபத்தில் 25 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1966 : இந்­தியப் பிர­தமர் லால் பகதூர் சாஸ்­தி­ரிக்கும் பாகிஸ்தான் ஜனா­தி­பதி அயூப்­கா­னுக்கும் இடையில் பேச்­சு­வார்த்­தைகள் அப்­போ­தைய சோவியத் யூனி­யனின் ஒரு குடி­ய­ர­சாக இருந்த உஸ்­பெ­கிஸ்­தானின் தாஷ்கெண்ட் நகரில் ஆரம்­ப­மா­யின.

1974 : யாழ்ப்­பா­ணத்தில் நான்­கா­வது உலகத் தமி­ழா­ராய்ச்சி மாநாடு ஆரம்­ப­மா­னது.

1977 : அப்பிள் கணினி நிறு­வனம் கூட்­டுத்­தா­ப­ன­மாக்­கப்­பட்­டது.

1990 : பனா­மாவின் முன்னாள் ஜனா­தி­பதி மனுவேல் நொரி­யேகா அமெ­ரிக்கப் படை­க­ளிடம் சர­ண­டைந்தார்.

1993 : ஆயு­தக்­கு­றைப்பு தொடர்­பான ஒப்­பந்­தத்தில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோர்ஜ் எச்.டபிள்­யூ. புஷ், ரஷ்ய ஜனா­தி­பதி பொரிஸ் யெல்ட்சின் ஆகியோர் கையெ­ழுத்­திட்­டனர்.

1994 : ரஷ்­யாவின் இர்­கூத்ஸ்க்கில் இருந்து புறப்­பட்ட விமானம் ஒன்று தரையில் மோதி வெடித்­ததில் 125 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1995 : இலங்கை அரசு, விடு­தலைப் புலி­க­ளுக்கு இடை­யி­லான பேச்­சு­வார்த்­தை­களின் இரண்டாம் கட்டம் ஆரம்பமானது.

2004 : எகிப்திய விமானம் ஒன்று செங்கடலில் வீழ்ந்ததால் அதில் பயணம் செய்த 148 பேரும் உயிரிழந்தனர்.

2015 : நைஜீ­ரி­யாவின் பாகா நகரில் போகோ ஹராம் தீவி­ர­வா­திகள் நடத்­திய தாக்­குல்­களில் சுமார் 2000 பேர் இறந்­தனர்.

(Visited 23 times, 1 visits today)

Post Author: metro