234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் புதிய முறையில் தெரிவு – ரஜினியின் நிபந்தனை

234 தொகு­தி­க­ளுக்கும் கட்சி வேட்­பா­ளர்கள் தேர்வில் ரஜினி விதித்­துள்ள நிபந்­தனை தமி­ழக தேர்தல் களத்தில் புதிய புயலை ஏற்­ப­டுத்தக் கூடும் என்று தமி­ழக அர­சியல் விமர்­ச­கர்கள் கூறு­கின்­றனர்.

நடிகர் ரஜி­னிகாந்த் புதி­தாக தனி அர­சியல் கட்சி தொடங்கப் போவ­தாக கடந்த ஞாயிறன்று அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­வித்தார்.

இதை­ய­டுத்து ரஜினி தொடங்கப் போகும் புதிய அர­சியல் கட்­சியின் பெயர் என்ன? கொடி எந்­தெந்த வண்­ணங்­களில் இருக்கும்? கட்­சியின் சின்னம் எப்­படி அமையும்? போன்­ற­வற்றை தெரிந்து கொள்ள மக்­க­ளிடம் ஆர்வம் ஏற்­பட்­டுள்­ளது.

நியா­யப்­ப­டியும் ஆன்­மிக அர­சி­யலை நடத்­தப்­போ­வ­தாக அறி­வித்து இருக்கும் ரஜினி, புதிய கட்சி ஆரம்­பிப்­ப­தற்கு கடந்த 6 மாதங்­க­ளுக்கு முன்பே திட்­ட­மிட்டு முடிவு செய்து விட்­ட­தாக தெரிய வந்­துள்­ளது. “தமி­ழ­கத்தில் சிஸ்டம் சரி இல்லை” என்று கூறும் ரஜினி, அதை நிவர்த்தி செய்ய தமி­ழகம் முழு­வதும் கள ஆய்வு செய்து முடித்­துள்ளார்.

குறிப்­பாக தமி­ழக விவ­சாயம், தொழில், அர­சியல் மூன்­றையும் அவர் அலசி ஆராய்ந்து புள்ளி விப­ரங்­களை கைவிரல் நுனியில் வைத்­தி­ருப்­ப­தாக கூறு­கின்­றனர். அதன் அடிப்­ப­டையில் தான் அவர் அர­சி­யலில் ஒவ்­வொரு நட­வ­டிக்­கை­யிலும் மெல்ல, மெல்ல ஈடு­ப­டுவார் என்று அவ­ருக்கு நெருக்­க­மா­ன­வர்கள் தெரி­வித்­தனர்.

முக்­கிய பிர­மு­கர்கள் சில­ரிடம் ஆலோ­சனை பெற்று வரும் ரஜினி வரும் பொங்கல் தினத்­தன்று புதிய கட்­சியின் பெயரை அறி­விப்பார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

அதன் பிறகு மாநில, மாவட்ட நிர்­வா­கி­களை ரஜினி நிய­மனம் செய்வார். தனது புதிய கட்­சியில் நிர்­வாக பொறுப்­புக்கு வரு­ப­வர்கள் ஊழல் செய்­யா­த­வர்­க­ளாக, சமூக சேவை செய்­வதில் ஆர்வம் உள்­ள­வர்­க­ளாக, மக்­க­ளுக்கு பணி­யாற்­று­வதில் தன்­னலம் இல்­லா­த­வர்­க­ளாக இருக்க வேண்டும் என்று ரஜினி விரும்­பு­கிறார்.

இந்த முடிவில் அவர் தெளி­வா­கவும், உறு­தி­யா­கவும் உள்ளார். இதை கருத்தில் கொண்­டுதான், தனது அர­சியல் கட்­சிக்கு புதிய உறுப்­பி­னர்­களை சேர்க்க இணைய தளம் ஆரம்­பித்­துள்ளார்.

தமி­ழ­கத்தில் ஒரு நல்ல அர­சியல் மாற்­றத்தை கொண்டு வர வேண்டும் என்று விரும்­பு­ப­வர்கள், அந்த இணைய தளத்தை பயன்­ப­டுத்தி உறுப்­பி­ன­ராக சேரும்­படி ரஜினி வேண்­டுகோள் விடுத்­துள்ளார். மேலும் ரஜினி மன்றம் எனும் செய­லியும் அறி­மு­கப்­ப­டுத்தப் பட்­டுள்­ளது. இதில் பல்­லா­யி­ரக்­கண க்கான­வர்கள் சேர்ந்து வரு­கி­றார்கள்.

புதி­தாக ரஜினி கட்­சியில் சேரு­ப­வர்­க­ளிடம் அவர்­க­ளது வாக்­காளர் அடை­யாள அட்டை எண்­ணையும் பதிவு செய்ய அறி­வுறுத் தப்­பட்­டுள்­ளது. அதை வைத்து உறுப்­பி­னர்­களில் நல்­ல­வர்­களை அடை­யாளம் காண ரஜினி திட்­ட­மிட்­டுள்ளார். அதா­வது தனது தாரக மந்­தி­ர­மான “உண்மை, உழைப்பு, உயர்வு” என்ற கொள்­கைக்கு ஏற்ப பொருத்­த­மா­ன­வர்­களை இதன் மூலம் தெரிவு செய்ய முடியும் என்று ரஜினி முழு­மை­யாக நம்­பு­கிறார்.

இந்த புது­மை­யான தேர்வு முறைக்­காக ரஜி­னிக்கு பின்­ன­ணியில் வலு­வான தொழில் நுட்­பக்­குழு ஒன்று ஓசை­யின்றி இயங்­கு­கி­றது. இந்த தொழில் நுட்­பக்­கு­ழுவில் இருப்­ப­வர்கள் ரஜி­னியின் கட்சி விவ­கா­ரங்­களில் செயல்­பட மாட்­டார்கள்.

இவர்­க­ளது பணியே ரஜி­னிக்கு ஒவ்­வொரு வி‌ட­யத்­திலும் அறி­வியல் ரீதி­யாக மிகத் துல்­லி­ய­மான தக­வல்­களை கொடுப்­ப­தாகும்.
ரஜி­னியின் தீவிர ரசி­கர்­களில் பலர் அமெ­ரிக்­காவில் பல்­வேறு ஐ.டி. நிறு­வ­னங்­களில் பணி­பு­ரிந்து வரு­கி­றார்கள். பொரு­ளா­தார ரீதியில் நல்ல நிலையில் இருக்கும் அவர்கள் துணை­யு­டன்தான் தமி­ழக அர­சியல் சிஸ்­டத்தை ரஜினி மாற்றி அமைக்க திட்­ட­மிட்­டுள்ளார்.

அ.தி.மு.க., தி.மு.க.வை வலி­மை­யாக எதிர்த்து, வெற்றி பெற இந்த தொழில் நுட்­பக்­குழு முக்­கிய பங்கு வகிக்கும் என்று பெயர் வெளி­யிட விரும்­பாத ரஜினி ரசிகர் மன்ற மூத்த நிர்­வாகி ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

தனது ரசி­கர்­களை மட்­டுமே வைத்து அர­சி­யலில் வெற்­றியை பெற முடி­யாது என்­பதை உணர்ந்­துள்ள ரஜினி, புதிய கட்­சியின் நிர்­வாகப் பொறுப்­பு­களை வழங்­கு­வதில், தனது ரசி­கர்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிப்­பது போன்ற எந்த செய­லையும் செய்ய மாட்டார் என்று தெரிய வந்­துள்­ளது. பதிவு செய்­யப்­பட்ட தனது மன்­றங்­களில் உள்ள ரசி­கர்­களில் சுமார் 60 சத­வீதம் பேர் ஊழல் சர்ச்­சை­களில் உள்­ள­வர்கள் என்­பதை அவர் ஆய்வு மூலம் தெரிந்து வைத்­துள்ளார்.

அந்த 60 சத­வீதம் பேருக்கு நிச்­சயம் ரஜினி எந்த பொறுப்பும் கொடுக்க மாட்டார் என்று கூறப்­ப­டு­கி­றது. அந்த 60 சத­வீதம் பேரில் பெரும்­பா­லா­ன­வர்கள் அண்­மையில் அவ­ருடன் நின்று புகைப்­படம் எடுத்துக் கொண்­ட­வர்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
இதனால் ரஜி­னி­யுடன் நின்று புகைப்­படம் எடுத்துக் கொண்ட எல்­லா­ருக்கும் பதவி கிடைத்து விடாது என்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது. புதிய கட்­சியில் தேவை­யற்ற சட்ட விரோத நபர்கள் நுழைந்து சிஸ்­டத்தை கெடுத்து விடக் கூடாது என்­ப­தற்­கா­கவே ரஜினி இந்த முடிவில் உறு­தி­யாக உள்ளார்.

தொழில்­நுட்ப உதவி மற்றும் பணம் மட்­டுமே தனது கட்­சியை வழி நடத்­தாது என்­பதால் சரி­யான வேட்­பா­ளர்கள் தேர்வு பெற வேண்டும் என்று ரஜினி உத்­த­ரவிட் டுள்ளார். இதைத் தொடர்ந்து 234 தொகு­தி­க­ளிலும் யார்- யாரை வேட்­பா­ள­ராக தெரிவு செய்­யலாம் என்று ரஜி­னியின் தொழில்­நுட்பக் குழு தக­வல்­களை திரட்டி வரு­கி­றது. ஒவ்­வொரு தொகு­தி­யிலும் தலா 3 பேரை தேர்வு செய்து அந்த தொழில் நுட்பக் குழு ரஜி­னியின் பார்­வைக்கு அனுப்பும். அவர்­களில் ஒரு­வரை ரஜினி வேட்­பா­ள­ராக தேர்ந்து எடுப்பார் என்று தெரி­கி­றது.

வேட்­பா­ளரை தெரிவு செய்யும் புதிய முறை­களில் பல்­வேறு அதி­ரடி அம்­சங்கள் இருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது. தொகு­திக்கு அறி­மு­க­மா­னவர், நல்­லவர், பண ஆசை இல்­லா­தவர் என்ற தகு­தி­க­ளையே ரஜினி எதிர்­பார்க்­கிறார். குறிப்­பாக வேட்­பாளர் தேர்வில் ரஜினி புது­மை­யான ஒரு நிபந்­த­னையை விதித்­துள்ளார். வேட்­பா­ள­ராக தெரிவு செய்­யப்­ப­டு­பவர் ஒரு கோடி ரூபா வரை செலவு செய்யும் பொரு­ளா­தார வச­தி­யுடன் இருக்க வேண்டும் என்று விரும்­பு­கிறார்.

அதே சம­யத்தில் ஒரு கோடி ரூபாவை தொகு­தியில் செலவு செய்து பின்னர், அதை திரும்ப எடுக்கும் எத்­த­கைய செயற்­பாட்­டு­டனும் மற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று ரஜினி கூறியுள்ளார். எனவே நவீன தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி 234 தொகுதிகளுக்கும் இத்தகைய வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணி நடைபெறவுள்ளது.

இது தவிர வேட்பாளர்கள் அனைவரும் படித்தவர்களாக, இளைஞர்களாக இருக்க வேண்டும் என்றும் ரஜினி தீர்மானித்துள்ளார். எனவே ரஜினி கட்சி வேட்பாளர்கள் தமிழகத் தேர்தல் களத்தில் புதிய புயலை ஏற்படுத்தக் கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.
(நன்றி : மலைமலர்)

(Visited 41 times, 1 visits today)

Post Author: metro