பொதுஜன பெரமுன அலுவலக ஒலிபெருக்கி சாதனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த திறந்து வைத்து சிறிது நேரத்தில் சம்பவம்

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷ­வினால் நேற்று முன்­தினம் திறந்து வைக்­கப்­பட்ட பொது ஜன பெர­மு­னவின் ஹம்­பாந்­தோட்டை மாவட்ட தேர்தல் நட­வ­டிக்கை அலு­வ­ல­கத்­தி­லி­ருந்த ஒலி­பெ­ருக்கி சாத­னங்­களை தங்­காலை பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

முன்னாள் ஜனா­தி­பதி குறித்த அலு­வ­ல­கத்தை திறந்து வைத்­து­விட்டு சென்று சிறிது நேரத்தில் அங்கு சென்ற தங்­காலை பொலிஸ் நிலைய பொலிஸார் அங்கு இயங்கிக் கொண்­டி­ருந்த ஒலி­பெ­ருக்கி கரு­வி­களை இவ்­வாறு கைப்­பற்றிச் சென்­றுள்­ளனர்.
ஒலி பெருக்கி சத­னங்­களை பயன்­ப­டுத்த உரிய அனு­ம­தி­களைப் பெறாமை கார­ண­மாக இவ்­வாறு அவற்றை கைப்­பற்ற வேண்டி ஏற்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

எவ்­வா­றா­யினும் ஒலி­பெ­ருக்கி சாதனங்­களை பயன்­ப­டுத்த அனு­ம­திப்­பத்­திரம் பெற்­றி­ருந்­த­தா­கவும் பொலிஸார் வரும் போது அந்த அனு­ம­திப்­பத்­திரம் கையில் இருக்­கா­மையால் அவர்கள் இவ்­வாறு அதனை கைப்­பற்றிச் சென்­ற­தா­கவும் குறித்த அலு­வ­லக திறப்பு விழா ஏற்­பாட்­டா­ளர்கள் தெரி­வித்­தனர்.

எனினும் தேர்தல் கூட்டம் ஒன்றை நடத்த ஒலி­பெ­ருக்கி பாவனை அனு­ம­தியை பொலிஸார் பெற்­றி­ருந்த போதும் அலு­வ­லக திறப்பு விழா­வுக்கு அவர்கள் அனு­மதி பெற­வில்லை எனவும் பொலிஸ் தரப்பில் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அத்­துடன் பதிவு செய்­யப்­ப­டாத தேர்தல் அலு­வ­லகம் ஒன்­றுக்கு ஒலி­பெ­ருக்கி அனு­ம­திப்­பத்­திரம் வழங்க முடி­யாது எனவும் பொலிஸார் சுட்­டிக்­காட்­டினர்.

இந்த நிலையில் இந்த ஒலி­பெ­ருக்கி சாத­னத்தை அனு­மதி பெறாமல் பயன்­ப­டுத்­தி­யமை தொடர்பில் தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்­ளியூ.எப்.யூ. பெர்­ணான்­டோவின் மேற்­பார்­வையில் மாத்­தறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்­ளியூ.கே.ஜயலால் மற்றும் தங்காலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.ஜி.எல்.கீதால் ஆகியோரின் ஆலோசனையில் தங்காலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(Visited 28 times, 1 visits today)

Post Author: metro