தலைகளை எண்ணி மொத்த வியாபாரம் செய்யும் அரசியல் கலாசாரத்துக்கு முடிவு கட்ட முன்வாருங்கள்! – அமைச்சர் ரிஷாத்

முஸ்லிம் சமூ­கத்தின் உரி­மை­க­ளை­பா­து­காக்க வந்த கட்­சி­யா­னது தலை­களை எண்ணி மொத்த வியா­பாரம் செய்து சமு­தா­யத்தின் எதிர்­கா­லத்தை கேள்­விக்­கு­றி­யாக்கிக் கொண்­டி­ருக்கும் துர­திர்ஷ்ட நிலைக்கு இந்தக் குட்டித் தேர்­தலின் மூலம் முடிவு கட்ட முன்­வா­ருங்கள் என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் கூறினார்.

அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், ஐக்­கிய சமா­தானக் கூட்­ட­மைப்பு மற்றும் தூய முஸ்லிம் காங்­கிரஸ் சிவில் அமைப்­புக்கள் இணைந்து உரு­வாக்­கி­யுள்ள ஐக்­கிய மக்கள் கூட்­ட­மைப்பில் அம்­பாறை மாவட்ட உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யாடல் அம்­பாறை மொண்டி ஹோட்­டலில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறி­ய­தா­வது, தேர்தல் காலங்­களில் தலை­களை எண்ணி, இத்­தனை வாக்குப் பலம் எங்கள் கட்­சிக்கு இருக்­கி­றது என்ற மாயையை ஏற்­ப­டுத்தி எவ்­வ­ளவு தொகை எங்­க­ளுக்கு தர­மு­டியும்? என்ற கேவ­ல­மான அர­சி­யலை நடத்­திக்­கொண்­டி­ருப்­ப­வர்­க­ளுக்கு சாவு மணி அடிக்க வேண்­டிய தேவைப்­பா­டு­தற்­போது எழுந்­துள்­ளது.

எமக்­கு­முன்னே வந்­தி­ருக்கும் ஆபத்­துக்­களை எதிர்­நோக்­கு­வ­தற்கு இந்தத் தேர்தல் நமக்கு பலம் சேர்க்க வேண்டும். நமது சமு­தாயம் இந்த சந்­தர்ப்­பத்தில் சரி­யான முடிவை எடுக்­க­வில்­லை­யென்றால், எதிர்­கா­லம் ­சூ­னி­ய­ம­ய­மாகி விடும். அர­சி­ய­ல­மைப்பு மாற்­றம், நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை ஒழிப்பு, தேர்தல் திருத்தச் சட்­ட­மூ­லங்­களால் முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­க­வுள்ள பாரிய ஆபத்­துக்­களை தடுப்­ப­தற்கு, இந்தத் தேர்­தலில் கிழக்கு மாகாண முஸ்­லிம்­களின் வாக்குப் பலமே அடித்­த­ளமாய் அமையப் போகின்­றது.

வடக்கு, கிழக்கு இணைப்பா, அல்­லது பிரிவா? நாடா­ளு­மன்றத் தேர்தல் முறையில் முஸ்லிம் சமூகத்துக்கும் மலையகத்தவர்களுக்கும்இழைக்கப்படவிருக்கும் அநீதிகளைத் தொடர இடமளிப்பதா? இல்லையா? என்ற கேள்விகளுக்கெல்லாம் இந்தத் தேர்தல் பாடம் புகட்டப் போகின்றது என்றார்.

(Visited 19 times, 1 visits today)

Post Author: metro