பொலித்தீன் தடைச் சட்டம் அமுலில்; சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பம்

(எம்.சி.நஜி­முதீன்)

பொலித்தீன் தடைச்­சட்டம் நேற்று முன்­தினம் முதல் அமு­லுக்கு வந்­துள்­ள­தா­கவும் அத­னையும் மீறி உக்­காத பொலித்தீன் தயா­ரிப்பு மற்றும் உப­யோகம் இடம்­பெ­று­மாயின் சுற்­றி­வ­ளைப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு அதற்­கெ­தி­ராக சட்ட நட­வ­டிக்கை எடு­க்கவுள்­ள­தாக மத்­திய சுற்­றாடல் அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்­ளது.

உக்­காத பொலித்தீன் பாவனை மற்றும் உற்­பத்­திக்கு எதி­ரான தடை குறித்த வர்த்­த­மானி அறி­வித்தல் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டது. அதற்­கி­ணங்க கடந்த வருடம் செப்­டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் உக்­காத பொலித்தீன் மற்றும் லஞ்­ஷீ­ட்டுக்கு தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது.

எனினும் அதற்­கான சலுகைக் காலக்­கெடு நேற்­று­முன்­தினம் வரை வழங்­கப்­பட்­டி­ருந்­தது. எனவே அச்­ச­லுகைக் காலக்­கெடு நிறை­வ­டைந்­த­தை­ய­டுத்து உக்­காத பொலித்தீன் உற்­பத்தி மற்றும் பயன்­பாட்டுக்கெதி­ரான தடைச்­சட்­டத்தை நேற்று முதல் அமுல்­ப­டுத்­து­வ­தற்கு மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

ஆகவே, அவ்­வ­கை­யான பொலித்தீன் பாவனை தொடர்பில் சுற்­றி­வ­ளைப்­பு­களை இன்று முதல் மேற்­கொண்டு குறித்த சட்­டத்தை மீறி செயற்­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக நடி­வ­டிக்கை எடுப்­ப­தற்கு மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை தீர்­மா­னித்­துள்­ளது.

எனினும் பொலித்தீன் உற்­பத்­தி­யா­ள­ர­்க­ளுக்கு அர­சாங்கம் வழங்­கு­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்த எந்­த­வொரு சலு­கை­யி­னையும் இது­வ­ரையில் அர­சாங்கம் வழங்­க­வில்லை என பொலித்தீன் உற்­பத்­தி­யாளர் சங்கம் குற்­றம்­சாட்­டி­யுள்­ளது. ஆயினும் பயன்­பாட்­டுக்கு உகந்த உக்கும் தன்மைகொண்ட பொலித்தீனை சந்தைக்கு விடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அவற்றின் விலை ஏனைய பொலித்தீனை விட சற்று அதிகரிக்கும் எனவும் அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

(Visited 35 times, 1 visits today)

Post Author: metro