வட கொரிய, தென் கொரிய ஒலிம்பிக் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த தென் கொரியா யோசனை

தமது நாட்டில் நடை­பெ­ற­வுள்ள பியொங்சங் 2018 குளிர்­கால ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் வட கொரி­யாவை பங்­கு­பற்றச் செய்யும் பொருட்டு அந் நாட்­டுடன் உயர்­மட்டப் பேச்­சு­வார்த்தை நடத்த தயார் என தென் கொரியா தெரி­வித்­துள்­ளது.

தென் கொரி­யாவின் பியொங்­சங்கில் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் நடை­பெ­ற­வுள்ள குளிர்­கால ஒலிம்பிக் விளை­யாட்டு விழா­வுக்கு தமது அணியை அனுப்­பு­வது குறித்து ஆலோ­சித்து வரு­வ­தாக வட கொரிய ஜனா­தி­பதி கிம் ஜோங் உன் தெரி­வித்­தி­ருந்தார்.
இதனை அடுத்தே பேச்­சு­வார்த்தை நடத்த தயார் என தென் கொரியா தெரி­வித்­தது.

இது குறித்து இரு­த­ரப்­பி­னரும் (ஒலிம்பிக் குழு­வினர்) அவ­சர சந்­திப்பை நடத்த வேண்டும் என கிம் ஜோங் உன் தெரி­வித்­தி­ருந்தார்.
இந்த அழைப்­பா­னது இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான உறவை மேம்­ப­டுத்­து­வ­தற்கு மிகச் சிறந்த முயற்சி என தென் கொரிய ஜனா­தி­பதி மூன் ஜாயே இன் கூறினார்.

விளை­யாட்­டுத்­துறை சார்ந்த ஏதேனும் கலந்­து­ரை­யா­ட­லின்­போது வட கொரி­யாவின் அணுத் திட்டம் பின்­பு­ல­மாக இருக்கும் என செவ்­வா­யன்று நடை­பெற்ற தென் கொரி­யாவின் அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தின்­போது தென் கொரிய ஜனா­தி­பதி குறிப்­பிட்டார்.
‘‘வட மற்றும் தென் கொரியா ஆகிய நாடு­க­ளுக்கு இடை­யி­லான உற­வு­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக வட கொரியா அணுத் திட்டம் தொடர்பில் புறம்­பாக செயற்­பட முடி­யாது. எனவே இந்த விடயம் தொடர்­பாக நேச நாடு­க­ளு­டனும் சர்­வ­தேச சமூ­கத்­து­டனும் வெளி­யு­றவு அமைச்சு இணைந்து செயற்­ப­ட­வேண்டும்’’ என மூன் தெரி­வித்தார்.

இரண்டு நாடு­க­ளி­னதும் பிர­தி­நி­திகள் ‘போர்­நி­றுத்த கிராமம்’ என அழைக்­கப்­படும் பன்­முன்­ஜொம்மில் பேச்­சு­வார்த்தை நடத்த முடியும் என்ற யோச­னையை தென் கொரிய ஐக்­கிய அமைச்சர் சோ மியொங் கியொன் முன்­வைத்­துள்ளார். இரா­ணுவ சூனிய வல­ய­மான இந்த எல்லைக் கிரா­மத்­தி­லேயே இரண்டு நாடு­களும் வர­லாற்று முக்­கி­யம்­வாய்ந்த பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­வந்­துள்­ளனர்.

பியொங்சங் 2018 குளிர்­கால ஒலிம்பிக் விளை­யாட்டு விழா எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 9ஆம் திக­தி­முதல் 25ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளது. இவ் விளை­யாட்டு விழாவில் சுமார் 90 நாடு­களைச் சேர்ந்த வீர வீராங்கனை கள் 7 வகையான விளையாட்டுப் போட்டிகளில் 102 நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளனர். இப் போட்டிகளில் கலந்துகொள்ள வட கொரியாவிலிருந்து இருவர் மாத்தி ரமே தககுதிபெற்றுள்ளனர்.

(Visited 21 times, 1 visits today)

Post Author: metro