ரஜினியின் காவலனாக மாறும் ராகவா லோரன்ஸ்! அரசியல் பிரவேசம் குறித்து விரைவில் அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்தின் காவலனாக அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவிருப்பதாக நடிகர் ராகவா ேலாரன்ஸ் தெரிவித்திருக்கிறார்.
அண்மையில் ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினிகாந்த், நான் அரசியலுக்கு வருவது உறுதி. விரைவில் தனிக்கட்சி ஆரம்பிப்பதாகவும் எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் ரஜினி அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அரசியலில் மும்முரம் காட்டி வரும் ரஜினிகாந்த், ரஜினிமன்றம் என்ற இணையத்தள பக்கத்தை ஆரம்பித்துள்ளார். அதில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர் மன்றம் அல்லாத அனைவரும் ஆதரவு அளிக்கும்படி ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

மேலும் அவரது ‘டுவிட்டர்’ பக்கத்தில், உண்மை, உழைப்பு, உயர்வு என்ற வாசகத்துடன் ‘பாபா’ முத்திரையுடன் ரஜினி பேசும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளதுடன், ரசிகர் மன்றங்களை இணைக்கவும், ஆட்சேர்ப்பு பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினி மன்றம் உருவாக்கியுள்ள (rajinimandram.org) என்ற இணையத்தளத்தின் 3 இலட்சம் பேர் இணைந்துள்ளதாகவும் 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த இணையத்தளத்தை பார்வையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.

இந்த நிலையில், சினிமாத் துறையில் ரஜினியின் தீவிர ரசிகன் என கூறும் நடிகர் ராகவா லோரன்ஸ் அவரின் அரசியல் பிரவேசத்துக்கு வரவேற்பு தெரிவித்தி ருப்பதுடன், விரைவில் அரசியல் பிரவேசம் குறித்து தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

அரசியல் பிரவேசம் குறித்து லோரன்ஸிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, நான் ரஜினியின் தீவிர ரசிகனாகவும் தொண்டனாகவும் இருக்கின்றேன் தற்போது அரசியலில் கால்பதிக்க விருக்கும் ரஜினிகாந்துக்கு நான் ஒரு காவலனாக இருப்பேன் என்றும் ஆவடி பகுதியிலுள்ள எனது தாய்க்கு கட்டிய கோவிலில் இருந்து விரைவில்ரஜினியின் காவலனாக தனது பயணத்தை ஆரம்பிக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே லோரன்ஸ் தனது அரசியல் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 60 times, 1 visits today)

Post Author: metro