கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த மனைவி கைது!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த மனைவியை இந்திய ஆந்திர மாநில பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தின் கடப்பா பகுதியைச் சேர்ந்த சிவா என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.

குறித்த பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்னரே சாய் சுபாஷ் என்ற இளைஞருடன் தொடர்பு இருந்துள்ளது. திருமணத்துக்கு பின்னரும் அதை தொடர்ந்துள்ளார்.

கணவன் இல்லாத நேரத்தில் சாய் சுபாஷுடன் வெளியில் சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சாய் சுபாஷை வீட்டுக்கு அழைத்து உல்லாசம் அனுபவிக்க ஆரம்பித்துள்ளார்.

மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் சிவாவுக்கு தெரியவந்த நிலையில், மனைவியை கண்டித்துள்ளார். இருந்தும் அவர் கள்ளக்காதலை விடவில்லை. இதனால் கணவன் –மனைவிக்கிடையில் தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கணவரை சாய் சுபாஷுடன் சேர்ந்து கொலை செய்வதற்கு முடிவெடுத்த சிவாவின் மனைவி அதற்கான திட்டத்தை கூறியுள்ளார்.

அதன்படி சிவாவை சுபாஷ் மது அருந்த அழைத்து சென்றுள்ளார். சுபாஷுடன் சிவாவின் மனைவி மற்றும் அவரின் நண்பர்களான வெங்கட்ரமணா மற்றும் ஸ்ரீனுவும் உடன் சென்றுள்ளனர். மது அருந்திய பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த சிவாவை அவரது மனைவி மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். இதில் மயங்கிய சிவாவை நண்பர்கள் மூவரும் சேர்ந்து உடல் முழுவதையும் கத்தியால் குத்தி சிதைத்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் சடலத்தை அங்குள்ள காட்டு பகுதியில் வீசியுள்ளனர். இதனிடையில் சிவாவை காணவில்லை என அவரின் குடும்பத்தார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அவர்களுடன் ஒன்றும் தெரியாதது போல சிவாவின் மனைவியும் முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்து பொலிஸார் விசாரணை நடத்தும் போது சிவாவின் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து சிவாவின் மனைவி மற்றும் சுபாஷை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

(Visited 116 times, 1 visits today)

Post Author: metro