போல்ட்டின் உலக சாதனைகள் 10 வருடங்கள் நிலைத்திருக்கும்

யுசெய்ன் போல்ட்­டினால் குறுந்­தூர ஓட்டப் போட்­டி­களில் நிலை­நாட்­டப்­பட்ட உலக சாத­னைகள் குறைந்­தது இன்னும் பத்து வரு­டங்­க­ளுக்கு புதுப்­பிக்­கப்­ப­ட­மாட்­டாது என ஒலிம்பிக் ஜாம்­பவான் மைக்கல் ஜோன்சன் தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன் உலக மெய்­வல்­லுநர் போட்­டி­களில் 200 மீற்றர் மற்றும் 400 மீற்றர் ஓட்டப் போட்­டி­களில் அசத்­திய தென் ஆபி­ரிக்­காவின் வெய்ட் வென் நிக்­கேர்க்கும் தனது பெறு­தி­க­ளை­விட சிறந்த பெறு­தி­களை மீண்டும் எட்­டு­வது என்­பது இய­லாத காரியம் எனவும் ஜோன்சன் கூறினார்.

அட்­லான்டா 1996 ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் மைக்கல் ஜோன்சன் 200 மீற்றர் ஓட்டப் போட்­டியை 19.32 செக்­கன்­களில் நிலை­நாட்­டிய உலக சாத­னையை 13 வரு­டங்கள் கழித்து 19.19 செக்­கன்­களில் ஓடி போல்ட் புதுப்­பித்­தி­ருந்தார். இந்த சாத­னையை பேர்­லினில் போல்ட் நிலை­நாட்­டினார். அதே போட்­டியில் 100 மீற்றர் ஓட்ட நிகழ்ச்­சியை 9.56 செக்­கன்­களில் ஓடிக்­க­டந்து மற்­றொரு உலக சாத­னையை அதற்கு முன்னர் போல்ட் நிலை­நாட்­டினார்.

‘‘சாத­னைகள் எப்­போது புதுப்­பிக்­கப்­படும் என்­பதை என்னால் உறு­தி­யாகக் கூற­மு­டி­யாது. ஆனால், சம­கால குறுந்­தூர ஓட்ட வீரர்­களால் போல்டின் சாத­னை­களை முறி­ய­டிக்க முடியும் என நான் நினைக்­க­வில்லை’’ என மைக்கல் ஜோன்சன் தெரி­வித்தார். ‘‘ஆனால் இன்னும் பத்து வரு­டங்­களில் இன்­னு­மொரு நிக­ரற்ற மாபெரும் வீரர் உரு­வாகி இந்த இரண்டு சாத­னை­க­ளையும் முறி­ய­டிக்­கலாம்’’ என்றார் அவர்.

மைக்கல் ஜோன்சன் 1999இல் 400 ஓட்டப் போட்­டியில் நிலை­நாட்­டிய 43.18 செக்­கன்கள் என்ற உலக சாத­னையை ரியோ 2016 ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் வெய்ட் வென் நிக்கேர்க் 43.03 செக்­கன்கள் என்ற பெறு­தி­யுடன் முறி­ய­டித்து புதிய உ லக சாத­னையை நிலை­நாட்­டினார்.

இதனைத் தொடர்ந்து லண்­டனில் இவ் வருடம் நடை­பெற்ற உலக மெய்­வல்­லுநர் போட்­டி­களில் 400 மீற்றர் சம்­பியன் பட்­டத்தை தக்­க­வைத்­துக்­கொண்ட வென் நிக்­கேர்க், 200 மீற்றர் ஓட்டப் போட்­டியில் துருக்கி வீரர் ரமில் குலி­யே­விடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்­கத்­தையே வென்­றெ­டுத்தார்.
‘‘200 மீற்­றர், 400 மீற்றர் என்ற இரட்­டையை வென்­றெடுப்­பது என்­பது இல­கு­வான காரி­ய­மல்ல’’ என ஜோன்சன் தெரி­வித்தார்.

‘‘அக்­கா­லங்­களில் நாங்கள் நான்கு சுற்­று­களில் பங்­கு­பற்­ற­வேண்­டி­யி­ருந்­தது. ஆனால் இப்­போது மூன்று சுற்­றுகள் மாத்­தி­ரமே ஓட்டப் போட்­டி­களில் இடம்­பெ­று­கின்­றன. எனவே சாத­னை­களை முறி­ய­டிப்­ப­தற்­கான திராணி வீரர்களிடம் தாராளமாக இருக்கும்’’ என அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால் எல்லாமே மெய்வல்லுநர் பயிலும் விதம், போட்டித்தன்மை ஆகியவற்றிலேயே தங்கியிருக்கின்றது என அவர் மேலும் கூறினார்.

(Visited 45 times, 1 visits today)

Post Author: metro