தேசிய கரப்பந்தாட்டப் பயிற்றுநர் தேர்வு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

இலங்கை கரப்­பந்­தாட்ட குழாம்­க­ளுக்கு தேசிய பயிற்­று­நர்­க­ளுக்­கான தேர்­வுகள் விரைவில் நடை­பெ­ற­வுள்­ளன. இதனை முன்­னிட்டு தகு­தியும் தரா­த­ரமும் உடைய பயிற்­று­நர்­க­ளிடம் இருந்து விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­வ­தாக இலங்கை கரப்­பந்­தாட்ட சம்­மே­ளனம் அறி­வித்­துள்­ளது.

தேசிய சிரேஷ்ட ஆண்கள் மற்றம் பெண்­கள், தேசிய கனிஷ்ட ஆண்கள் மற்றும் பெண்கள், தேசிய இளையோர் ஆகிய குழாம்­க­ளுக்கு புதிய பயிற்­று­நர்கள் மற்றும் உதவி பயிற்­று­நர்கள் தேர்வு நடை­பெ­ற­வுள்­ளது.

இப் பத­வி­க­ளுக்கு விண்­ணப்­பிக்கும் பயிற்­று­நர்கள் தங்­க­ளது சுய விப­ரங்கள் அடங்­கிய தக­வல்­க­ளுடன் விண்­ணப்­பிக்­கு­மாறு கோரப்­ப­டு­கின்­றனர். கல்வித் தகை­மைகள் மற்றும் விளை­யாட்­டுத்­துறை தகை­மைகள் குறிப்­பி­டப்­படல் அவ­சியம்.

விண்­ணப்­ப­தா­ரிகள் தங்­க­ளது விண்­ணப்­பங்­களை தலைமைச் செய­லாளர், இலங்கை கரப்­பந்­தாட்ட சம்­மே­ளனம், 33 டொரிங்டன் சதுக்கம், கொழும்பு 7 என்ற முகவரிக்கு 2018 ஜனவரி 10ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு கோரப்படுகின்றனர்.

(Visited 21 times, 1 visits today)

Post Author: metro