ஊக்கமருந்து பாவனைக்கு எதிரான உடன்படிக்கையில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கைச்சாத்திட்டார்

மொஸ்­கோவில் ஆய்­வு­கூடம் ஒன்றை அமைத்தல் மற்றும் தவ­றி­ழைக்கும் பயிற்­று­நர்­களை பத­வி­நீக்கம் செய்தல் ஆகி­ய­வற்றை நோக்­காகக் கொண்டு ஊக்­க­ம­ருந்து பாவ­னைக்கு எதி­ரான சட்­டங்கள் அடங்­கிய உடன்­ப­டிக்­கையில் ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின் கைச்­சாத்­திட்­டுள்ளார்.

ஊக்­க­ம­ருந்­து­க­ளையும், மனோ­நி­லையை சீராக வைத்­தி­ருக்­கூ­டிய மருந்­து­வ­கை­க­ளையும் இறக்­கு­மதி செய்­வ­தற்கும், ஏற்­று­மதி செய்­வ­தற்­கு­மான அதி­கா­ரத்தை மொஸ்கோ லொமொ­னொசோவ் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்தில் அமைக்­கப்­ப­ட­வுள்ள இந்த ஆய்­வு­கூடம் கொண்­டி­ருக்கும்.
சட்ட விதி­களில் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ள­வாறு ஆராய்ச்­சிகள் மற்றும் கல்வித் தேவைகள் ஆகி­ய­வற்­றுக்­கா­கவும் இந்த ஆய்­வு­கூடம் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

ஊக்­க­ம­ருந்து பாவ­னைக்­கான விதி­களைக் கண்­கா­ணிக்கும் வகையில் செயற்­ப­டு­வ­தற்­கான அனு­மதி தேசிய ஊக்­க­ம­ருந்து பாவ­னைக்கு எதி­ரான ஆய்­வு­கூ­டத்­திற்கு வழங்­கப்­படும் எனவும் சட்­ட­வி­தியில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அரச அனு­ச­ர­ணை­யுடன் ரஷ்ய வீர, வீராங்­க­னைகள் தடை­செய்­யப்­பட்ட ஊக்­க­ம­ருந்து பாவ­னையில் ஈடு­பட்­டு­வந்­த­தாக சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்­டதை அடுத்து பியொங்செங் 2018 குளிர்­கால ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் ரஷ்ய மெய்­வல்­லு­நர்கள், ஒலிம்பிக் கொடி­யின்கீழ் நடு­நி­லை­யாக பங்­கு­பற்ற அனு­ம­திக்­கப்­ப­டுவர் என சர்­வ­தேச ஒலிம்பிக் குழு கடந்த வருட முற்­ப­கு­தியில் அறி­வித்­தது.

இதனை அடுத்து ஆய்­வு­கூ­டத்தை ஸ்தாபிப்­ப­தற்­கான பணிகள் கடந்த மார்ச் மாதம் ஆரம்­ப­மா­யின. இந்த ஆய்­வு­கூ­டத்தை நடத்­திச்­செல்ல வெளி­நாட்டு நிபுணர் ஒருவர் நிய­மிக்­கப்­ப­டுவார் என பல்­க­லைக்­க­ழகத் தலைவர் விக்டர் சடோவ்­னிச்சி தெரி­வித்தார்.

இதே­வேளை தடை­செய்­யப்­பட்ட ஊக்­க­ம­ருந்து பாவ­னைக்கு எதி­ரான உலக முகவர் நிலை­யத்­தினால் (வாடா) சீல்­வைக்­கப்­பட்ட மொஸ்கோ ஊக்­க­ம­ருந்து பானைக்கு எதி­ரான ஆய்­வு­கூ­டத்­திற்கு பகுதி அளவில் இயங்­கு­வ­தற்­கான அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

இதற்கு அமைய இரத்தப் பரிசோதனைகளை மாத்திரம் இந்த ஆய்வுகூடத்தில் இப்போதைக்கு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகூடம் எதிர்வரும் மே மாதத்திலிருந்து முழுவீச்சில் செயற்படும் என எதிர்பார்ப்பதாக விக்டர் சடோவ்னிச்சி குறிப்பிட்டார்.

(Visited 25 times, 1 visits today)

Post Author: metro