Time’s Up : பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக ஹொலிவூட் நட்சத்திரங்கள் ஆரம்பித்த திட்டம்

திரைப்­படத் துறை­யிலும் ஏனைய வேலைத்­த­லங்­க­ளிலும் இடம்­பெறும் பாலியல் தொந்­த­ர­வு­க­ளுக்கு எதி­ராக போரா­டு­வ­தற்­காக பாரிய எதிர்ப்புப் பிர­சாரத் திட்­ட­மொன்று ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

300 இற்கும் அதி­க­மான நடி­கைகள், இயக்­கு­நர்கள் இணைந்து ஆரம்­பித்த இந்த முன்­மு­யற்சி ரைம்ஸ் அப் (Time’s Up) என அழைக்­கப்­ப­டு­கி­றது.

ஹொலிவூட் நடி­கை­க­ளான நட்­டாலி போர்ட்மேன், எம்மா ஸ்டோன், ரீஸ் விதர்ஸ்பூன், கேட் பிளென்செட், ஈவா லோங்­க­ரியா, அமெ­ரிக்கா ஃபெராரா மற்றும் தொலைக்­காட்சி நிகழ்ச்சித் தயா­ரிப்­பாளர் ஷோண்டா ரீமெஸ் ஆகி­யோரும் இத்­திட்­டத்­துக்கு ஆத­ர­வளிக்­கின்­றனர்.

ஒஸ்கார் விரு­து­வென்ற ஹொலிவூட் திரைப்­படத் தயா­ரிப்­பாளர் ஹார்வீ வைன்ஸ்டீன் மீது ஹொலிவூட் நடி­கைகள் உட்­பட பலர் பாலியல் குற்­றச்­சாட்­டு­களை சுமத்­திய நிலையில் வேறு பல துறை­களைச் சேர்ந்த பெண்­களும் தாம் எதிர்­கொண்ட பாலியல் தொந்­த­ர­வுகள் குறித்து வெளிப்­ப­டை­யாக பேச ஆரம்­பித்­துள்­ளனர்.

இந்­நி­லையில், இத்­த­கைய பாலியல் தொந்­த­ர­வு­க­ளுக்கு எதி­ராக போரா­டு­வ­தற்கும் சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு உத­வு­வ­தற்கும் இத்­திட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இத்­திட்­டத்தின் மூலம் சேக­ரிக்­கப்­படும் நிதி­யா­னது பாலியல் வன்­மு­றைகள், தொந்­த­ர­வு­களால் பாதிக்­கப்­பட்ட பெண்­களும் ஆண்­களும் சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கு உத­வு­வ­தற்­காகப் பயன்­ப­டுத்­தப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத்­திட்­டத்தின் மூலம் ஏற்­கெ­னவே 13 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கு (சுமார் 20 கோடி ரூபா) சேக­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

பாலியல் தொந்­த­ரவு­களால் பாதிக்­கப்­பட்ட பெண்கள் அனை­வ­ருக்கும் உத­வு­வதை இத்­திட்டம் இலக்­காக கொண்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முதல் படி­யாக சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு வச­தி­யற்ற நிலை­யி­லுள்ள தொழற்­சாலை ஊழி­யர்கள், பரா­ம­ரிப்­பா­ளர்கள், உண­வு­வி­டுதி ஊழி­யர்கள் போன்­றோ­ருக்கு உதவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

குற்றங்களைப் புரிபவர்கள் ஒருபோதும் பின்விளைவுகளை எதிர்கொள்ளாததால், பாலியல் தொந்தரவுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என இத்திட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

(Visited 76 times, 1 visits today)

Post Author: metro