வவுனியாவில் மாணவி துஷ்பிரயோகம்: 17வயதான இளைஞர் சந்தேகத்தில் கைது!

(கதீஸ்)

வவு­னியா ஈச்­சங்­குளம் பகு­தியில் 13 வய­தான பாட­சாலை மாண­வியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­திய சந்­தே­கத்தில் 17 வயது இளைஞர் ஒருவர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளர்.

கடந்த ஒரு வரு­ட­மாக இரு­வரும் காத­லித்து வந்­துள்ள நிலையில் சம்­பவ தினம் குறித்த மாணவி வீட்டை விட்டு வெளி­யேறி தனது காத­லுடன் சென்­றுள்ளார். மாண­வியின் பெற்றோர் மாலை வரை அவரைத் தேடியும் கண்­டு­பி­டிக்க முடி­யா­மையால் ஈச்­சங்­குளம் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளனர். சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொண்ட ஈச்­சங்­குளம் பொலிஸார் சிறு­வ­னையும், மாண­வி­யையும் பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்து விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளனர்.

இதன் போது குறித்த பாட­சாலை மாணவி பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­டுள்­ளமை உறுதி செய்­யப்­பட்­டது. அத­னை­ய­டுத்து குறித்த சிறுமி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­துடன், குறித்த மாணவன் வவு­னியா மாவட்ட நீதவான் நீதி­மன்­றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

(Visited 35 times, 1 visits today)

Post Author: metro