சாய்ந்தமருது சுயேச்சையில் உறுப்பினர்கள் தெரிவானாலும் மாநகர சபையில் அமர முடியாது! – அமைச்சர் ரவூப் ஹக்கீம்

சாய்ந்­த­ம­ருதில் அவர்கள் தோண்­டிய குழிக்குள் அவர்­க­ளா­கவே வீழ்ந்­துள்­ளார்கள். யாரும் வரக்­கூ­டாது என்று வன்­முறை செய்­தார்கள். ஆனால், இப்­போது சாய்ந்­த­ம­ருதில் தார­ள­மாக கூட்டம் நடத்­தலாம். தேர்­தல்கள் ஆணை­யாளர் இது­தொ­டர்பில் விசா­ரணை நடத்­திக்­கொண்­டி­ருக்­கிறார்.

தேர்தல் ஆணையாளர் சாய்ந்­த­ம­ருது பள்ளி நிர்­வா­கத்தை கலைக்­கப்­போ­கின்றார். சட்­ட­வி­ரோத செயற்­பா­டுகள் மூலம் சுயேச்­சைக்­கு­ழுவில் உறுப்­பி­னர்கள் தெரி­வா­னாலும் சபையில் உட்­கார முடி­யாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும், அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.
இறக்­காமம் பிர­தேச சபையில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­களின் தேர்தல் பிர­சார அலு­வ­ல­கங்­களை திறந்­து­வைத்த பின்னர் நடை­பெற்ற கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது; முழங்­கா­லுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடு­வ­து­போல சிலர் மாயக்­கல்லி மலைக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் யானைச் சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தற்கும் முடிச்­சுப்­போட்டு பேசித்­தி­ரி­கின்­றனர். எங்­க­ளது கோட்­டையில் யானையில் கேட்­பது என்­பது ஒரு தேர்தல் வியூகம். உள்­ளூ­ராட்சி சபை­க­ளில் அனு­கூ­லங்­களை அடைந்­து­கொள்­வ­தற்­கான ஒரு முயற்­சியே தவிர இதில் வேறொன்­று­மில்லை. சின்­னங்கள் வேறு­பட்­டாலும் எண்­ணங்கள் மாறு­ப­ட­வில்லை.

யானையில் போட்­டி­யிட்­டுத்தான் வெல்­ல­வேண்­டு­மென்ற தேவை எங்­க­ளுக்கு கிடை­யாது. ஆனால், யானையில் கேட்­ப­தன்­மூலம் பின்னர் ஏற்­ப­டு­கின்ற விப­ரீ­தங்­க­ளுக்கு நாங்கள் யானை­யையும் சேர்ந்து கட்­டிப்­போ­டலாம். சில மதம்­பி­டித்த யானை­களும் இருக்­கின்­றன. அவை ஊருக்குள் புகுந்­து­வி­டக்­கூ­டாது. அதற்­கா­கத்­தா, முழு யானைக்­கூட்­டத்­தையும் எங்­க­ளது கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்­கிறோம்.

எங்­க­ளது முன்னாள் செய­லாளர் ஹஸன் அலி இப்­போது றிஷாதின் படத்­தையும் போட்­டுக்­கொண்டு மயில் சின்­னத்­துடன் குந்­திக்­கொண்­டி­ருக்­கிறார். மரத்தின் நிழல்­கூட படாத றிஷாத் பதி­யுதீன், மர்ஹூம் அஷ்ஃ­ரபின் காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சியின் மத்திய குழுவில் உறுப்பினராக இருந்தவர்.
மறைந்த தலைவர் இருக்கும் போது அவரின் காற்று கூட படாத றிஷாத் பதியுதீன், இப்போது அவரின் படத்தையும் போட்டு தேர்தல் கேட்பது என்னவொரு அநியாயம் என்றார்.

(Visited 33 times, 1 visits today)

Post Author: metro