தோட்ட வைத்திய அதிகாரிக்கு எதிராக லிந்துலையில் உருவப் பொம்மை எரித்து தொழிலாளர் ஆர்ப்பாட்டம்!

(க.கிஷாந்தன்)

லிந்­துலை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட நாக­சேனை தோட்­டத்தில் தோட்ட வைத்­திய அதி­கா­ரிக்கு எதி­ராக அத்­தோட்ட மக்கள் வைத்­திய அதி­கா­ரியின் உருவப் பொம்மை மற்றும் டயர்­களை எரித்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடுப்­பட்­டனர்.

நாக­சேனை தோட்ட வைத்­தியரால் அத்தோட்­டத்தின் தொழி­லா­ளர்­க­ளுக்கு உரிய வைத்­திய சேவை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தில்லை எனவும் சுகா­தார நட­வ­டிக்­கை­களில் அதிக அக்­கறை கொள்­வ­தில்லை எனவும் குற்­றஞ்­சாட்­டியே சுமார் 300க்கும் மேற்­பட்ட தொழி­லா­ளர்கள் கோஷங்­களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

(Visited 16 times, 1 visits today)

Post Author: metro