மயக்­க­முற்று கீழே வீழ்ந்த விமானப்படை வீரர் தலையில் பலத்த காய­ம­டைந்­ததால் உயி­ரி­ழந்தார்!

(கம்­பளை நிருபர்)

கொத்­ம­லையில் உள்ள மொழிப் பயிற்சி முகாமில் தமிழ் மொழி பயிற்­சியில் ஈடு­பட்டு வந்த விமானப் படை வீரர் ஒருவர் திடீ­ரென உயி­ரி­ழந்­துள்ளார்.
கம்­பளை கல்­பாய மீத­லாவ என்ற இடத்தைச் சேர்ந்த அத்தநாய­க்க­லாகே சுசந்த அத்தநாயக்க என்ற 38 வய­தான மூன்று பிள்ளைகளின் தந்­தை­யான விமானப்படை வீரரே உயி­ரி­ழந்­த­வ­ராவார்.

மொற­வெ­வயில் அமைந்­துள்ள விமானப் படை முகாமில் கட­மை­யாற்றி வரும் குறித்த வீரர், தமிழ் மொழி பயிற்­சிக்­காக கொத்­ம­லையில் அமைந்­துள்ள இரா­ணுவ முகாமில் மொழி பயிற்சி பிரிவில் பயிற்­சியில் ஈடு­பட்டு வந்த நிலையில் இவர் வெள்­ளிக்­கி­ழமை காலையில் வழமை போல் உடற்பயிற்­சியில் ஈடு­பட்­டி­ருந்த போது திடீ­ரென மயக்­க­முற்று வீழ்ந்­துள்ளார்.

இதை­ய­டுத்து, இவர் கம்­பளை ஆதார வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சையளிக்­கப்­பட்ட பொழுதும் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்ளார்.
குறித்த வீரர் கீழே வீழ்ந்­ததில் தலையில் உள்ள நரம்பில் ஏற்­பட்ட வெடிப்பு கார­ண­மா­கவே மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.

(Visited 20 times, 1 visits today)

Post Author: metro