அமெ­ரிக்க டொலர்கள், 120 பண்டல் சிக­ரெட்­டு­க­ளுடன் சாவ­கச்­சே­ரியைச் சேர்ந்­தவர் கட்­டு­நா­யக்­கவில் கைது!

(எஸ்.கே.)

அமெ­ரிக்க டொலர்கள் மற்றும் 120 பண்டல் சிக­ரெட்­டு­களை சட்­ட­வி­ரோ­த­மாக இலங்­கைக்கு கொண்டு வந்த சாவ­கச்­சே­ரியைச் சேர்ந்த நபர் ஒரு­வரை கட்­டு­நா­யக்க விமான நிலைய சுங்க அதி­கா­ரிகள் சனிக்­கி­ழமை கைது செய்­துள்­ளனர்.

இந்த நபர் சென்னை நக­ரி­லி­ருந்து வந்­துள்­ள­தா­கவும் இவ­ரது உடலில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த சுமார் 38 இலட்ச ரூபா பெறு­ம­தி­யான 25,000 டொலர்கள் கைப்­பற்­றப்­பட்­ட­தா­கவும் சுங்கப் பிரி­வினர் தெரி­விக்­கின்­றனர்.

மேலும் இவ­ரது பயணப் பொதி­யி­லி­ருந்து 120 பண்டல் சிக­ரெட்­டுகள் கைப்­பற்­றப்­பட்­ட­தா­கவும் சிக­ரட்­டு­களின் பெறு­மதி ஒரு இலட்­சத்து இரு­ப­தி­னா­யிரம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். டொலர் நோட்டுகளும் சிகரட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

(Visited 20 times, 1 visits today)

Post Author: metro