ஆசிய வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான இலங்கைக் குழாம் தெரிவு 20 ஆம் திகதி

சிங்­கப்­பூரில் இவ் வருடம் நடை­பெ­ற­வுள்ள ஆசிய வலை­பந்­தாட்டப் போட்­டியை முன்­னிட்டு இலங்கை வலை­பந்­தாட்ட குழாம் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளது. ஏற்­க­னவே அனு­பவம் வாய்ந்த 25 வீராங்­க­னைகள் உடற்­த­குதி தேர்­வுடன் பயிற்­சியில் ஈடு­பட்­டு­வரும் நிலையில் சிறந்த இளம் வீராங்­க­னை­களை குழாத்தில் இணைக்கும் நட­வ­டிக்­கை­யாக இந்தத் தேர்வு நடை­பெ­ற­வுள்­ளது.
உடற்­த­கு­திகாண் தேர்­வுகள் ஜயன்த சிய­மு­தலி, லக்­மினி சம­ர­சிங்க ஆகி­யோ­ரினால் நடத்­தப்­ப­டு­கின்­றது. இத் தேர்வு மரு­தானை புனித சூசை­யப்பர் (ஜோசப்) கல்­லூரி உள்­ளக விளை­யாட்­ட­ரங்கில் எதிர்­வரும் 20ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.
மலே­சி­யாவில் கடை­சி­யாக 2009இல் சம்­பி­யா­னது உட்­பட நான்கு தட­வைகள் ஆசிய சம்­பி­ய­னான இலங்­கையை மீண்டும் சம்­பி­ய­னாக்கும் குறிக்­கோ­ளுடன் முன்னாள் ஆசிய சம்­பியன் அணி வீராங்­கனை திலகா ஜின­தா­சவை இலங்கை வலை­பந்­தாட்ட சம்­மே­ளனம் நிய­மித்­துள்­ளது.  பல வரு­டங்­க­ளாக புருணை வலை­பந்­தாட்ட அணியின் பயிற்­று­ந­ராக பதி­வி­ வ­கித்­து­வந்த திலகா ஜின­தாச இதற்கு முன்னர் 1990களின் பிற்­ப­கு­தியில் இலங்கை வலை­பந்­தாட்டப் பயிற்­று­ந­ராக இருந்தார்.
இவ் வாரம் இலங்கை வரு­கை­த­ர­வுள்ள திலகா ஜின­தாச வீராங்­க­னைகள் தேர்­விலும் கலந்­து­கொள்­ள­வுள்ளார். 1989, 1997, 2001, 2009 ஆகிய வரு­டங்­களில் ஆசிய சம்­பி­ய­னான இலங்கை, 2012, 2014, 2016 ஆகிய வரு­டங்­களில் இரண்டாம் இடங்­களைப் பெற்­றது.
இங்­கி­லாந்தில் 2019இல் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ண வலை­பந்­தாட்டப் போட்­டிக்­கான ஆசிய வலைய தகு­திகாண் சுற்று போட்­டி­யாக சிங்­கப்பூர் ஆசிய வலைபந்தாட்டப் போட்டி அமையவுள்ளது.  அப்போட்டியில் முதலிரண்டு இடங் களைப் பெறும் நாடுகள் உலகக் கிண்ண வலை பந்தாட்டப் போட்டியில் பங்கு பற்ற தகுதிபெறும்.
(Visited 21 times, 1 visits today)

Post Author: metro