முருகதா­­ஸுடன் இணை­­வது மகத்­தானது – ஏ.ஆர். ரஹ்­மா­ன்

முரு­கதாஸ் திற­மை­யான இயக்­கு நர், திரைப்­பட பாடல்­க­ளுக்கு நன்­றாக காட்­சி­களை அமைக்­கிறார். 10 ஆண்­டு­க­ளுக்குப் பிறகு அவ­ருடன் இணை­வது மகத்­தா­னது என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறி­யுள்ளார்.

விஜய் படம் உட்­பட பல்­வேறு படங்­க­ளுக்கு இசை­ய­மைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்­று சென்­னையில் நடை­பெற்ற செய்­தி­யா­ளர்கள் சந்­திப்பில் கூறி­ய­தா­வது: ”முரு­கதாஸ் திற­மை­யான இயக்­குநர், திரைப்­பட பாடல்­க­ளுக்கு நன்­றாக காட்­சி­களை அமைக்­கிறார்.

10 ஆண்­டு­க­ளுக்குப் பிறகு அவ­ருடன் இணை­வது மகத்­தா­னது. ‘மெர்சல்’ பாடல்­க­ளி­லி­ருந்து வித்­தி­யா­ச­மான பாடல்­களை விரும்­பு­ப­வர்­க­ளுக்கு இந்தப் படத்தின் பாடல்கள் விருந்­தாக அமையும். விஜய்யை பாட­வைக்க வாய்ப்­பி­ருக்­கி­றதா எனப­தை பார்த்து வரு­கிறோம், ஒரு­வரை ஒரு விஷ­யத்தைச் செய்­யு­மாறு வற்­பு­றுத்தக் கூடாது. கடை­சியில் இது அவர் படம்தான். பார்ப்போம்” என்றார்.

ஏ.ஆர்.முரு­கதாஸ் இயக்­கத்தில் அமிர்கான், அசின் நடித்த ‘கஜினி’ இந்திப் படத்­துக்கு ரஹ்மான் இசை­ய­மைத்­தி­ருந்தார். இந்­நி­லையில், 10 ஆண்­டு­க­ளுக்குப் பிறகு ஏ.ஆர்.முரு­கதாஸ், – ரஹ்மான் கூட்­டணி இணைந்­தி­ருப்­பதால் விஜய் படத்­துக்கு மிகப் பெரிய எதிர்­பார்ப்பு ஏற்­பட்­டுள்­ளது. சன் பிக்சர்ஸ் தயா­ரிக்கும் விஜய், – முரு­கதாஸ் படத்தில் நாய­கி­யாக கீர்த்தி சுரேஷ், ஒளிப்­ப­தி­வா­ள­ராக க்ரிஷ் கங்காதரன் மற்றும் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

(Visited 45 times, 1 visits today)

Post Author: metro