கள்ளத் தொடர்பு வைத்­தி­ருந்த பெண்­ணுக்கு தான் வாங்கிக் கொடுத்த கரு­வாட்டை மீளப் பெற்றுத் தரு­மாறு பொலிஸில் முறை­யிட்ட 65 வயது நபர்!

(எஸ்.கே)

தம்மை வீட்டை விட்டு விரட்­டி­ய­டித்த கள்ளக் காத­லி­யி­ட­மி­ருந்து தமது உடை­மை­க­ளையும் தான் இறு­தி­யாக வாங்கிக் கொடுத்த கட்டா கரு­வாட்­டையும் மீளப் பெற்­றுத்­த­ரும்­படி 65 வய­தான நபர் ஒருவர் கட்­டு­கஸ்­தோட்ட பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

இந்த நபர் பிலி­மத்­த­லாவ, கிரா­கம பிர­தே­சத்தைச் சேர்ந்­தவர். இவர் கட்­டு­கஸ்­தோட்ட பிர­தே­சத்­தி­லுள்ள விகாரை ஒன்றில் தங்­கி­யி­ருந்து அங்கு வசித்த பிக்­குவின் வேலை­களைச் செய்து வந்­துள்ளார்.

இந்த நிலையில் இந்த 65 வயது நப­ருக்கு ரண­வண பிர­தே­சத்தைச் சேர்ந்த பெண் ஒரு­வ­ருடன் கள்­ளத்­தொ­டர்பு ஏற்­பட்­டுள்­ளது. பின்னர் இரு­வரும் கட்­டு­கஸ்­தோட்ட ரண­வண வீதியில் வீடு ஒன்றை வாட­கைக்குப் பெற்று குடி­யி­ருந்­துள்­ளனர்.

இக்­கால கட்­டத்தில் இரு­வ­ருக்­கு­மி­டையே அடிக்­கடி சச்­ச­ரவு ஏற்­பட்­டுள்­ளது. கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் இந்த நபரை கள்­ளத்­தொ­டர்பு வைத்­தி­ருந்த பெண் வீட்­டை­விட்டு விரட்­டி­ய­டித்­துள்ளார்.

பின்னர் இந்த நபர் கட்­டு­கஸ்­தோட்ட பொலிஸ் நிலை­யத்­துக்குச் சென்று கள்­ளத்­தொ­டர்பு வைத்­தி­ருந்த பெண்­ணுடன் தாம் தொடர்ந்து வாழ நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறும் அவ்­வாறு இல்­லா­விட்டால் அந்த வீட்­டி­லுள்ள தமது உடை­மை­க­ளையும் இறு­தி­யாக தாம் அப்­பெண்­ணுக்கு வாங்­கிக்­கொ­டுத்த கட்டா ரக கரு­வாட்­டையும் பெற்­றுத்­த­ரு­மாறும் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

இதன்­படி இந்த நப­ருடன் கள்­ளத்­தொ­டர்பு வைத்­தி­ருந்த பெண்ணை தேடிச்­சென்ற பொலிஸார் பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்துவந்து அவரிடமிருந்த 65 வயதான நபரின் கட்டா கருவாடு உட்பட உடைமைகளை அந்த நபரிடம் ஒப்படைக்கும்படி தெரிவித்து இருவரையும் அனுப்பி வைத்தனர்.

(Visited 161 times, 1 visits today)

Post Author: metro