உடற்தகுதியில் தேறினார் ஏஞ்சலோ மெத்யூஸ்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் உடற்­த­கு­தியில் தேறினார் என அறி­விக்­கப்­ப­டு­கின்­றது.
இதனை அடுத்து இரு­வகை சர்­வ­தேச மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர்­க­ளுக்­கான இலங்கை அணித் தலைவர் பதவி அவ­ரிடம் மீண்டும் ஒப்­ப­டைக்­கப்­ப­டலாம் என பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

பங்­க­ளா­தேஷில் அடுத்த வாரம் ஆரம்­ப­மா­க­வுள்ள மும்­முனை சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்­கேற்­க­வுள்ள இலங்கை அணியின் தலைவர் யார் என்­பது இன்று அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது.

இத் தொடரை முன்­னிட்டு புதிய அணித் தலைவர் நிய­மிக்­கப்­ப­டுவார் எனவும் அப் பத­விக்கு ஏஞ்­சலோ மெத்யூஸ், தினேஷ் சந்­திமால் ஆகி­யோரின் பெயர்­களை தெரிவுக் குழுத் தலைவர் க்ரேம் லெப்ரோய் பரிந்­து­ரைத்­துள்­ள­தா­கவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் சில தினங்­க­ளுக்கு முன்னர் அறி­வித்­தது.

இதே­வேளை டெஸ்ட் அணித் தலைவர் பதவி தினேஷ் சந்­தி­மா­லி­டமே இருக்கும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. சில காலம் உபாதை கார­ண­மாக ஓய்­வு­பெற்­று­வந்த மெத்யூஸ், கடந்த வருட இறு­தியில் இந்­தி­யா­வுக்கு எதி­ராக நடை­பெற்ற இரு­வகை சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்­களில் பங்­கு­பற்­றினார்.

மூன்று சர்­வ­தேச ஒருநாள் போட்­டி­க­ளிலும் திற­மையை வெளிப்­ப­டுத்­திய மெத்யூஸ் ஆரம்ப பந்­து­வீச்­சா­ள­ரா­கவும் சிறப்­பாக செயற்­பட்டார். தொடர்ந்து இரண்­டா­வது சர்­வ­தேச இரு­பது 20 போட்­டி­யின்­போது சிறப்­பாக பந்­து­வீ­சிக்­கொண்­டி­ருக்­கையில் மீண்டும் உபா­தைக்­குள்­ளானார்.

இந் நிலையில் அவ­ரது உடற்­த­குதி தேர்வு அறிக்கை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்­திடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான இலங்கை அணித் தலைவரை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது.

(Visited 43 times, 1 visits today)

Post Author: metro