திருமண சேவையின் மூலம் எட்டுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபருக்கு பொலிஸார் வலை!

கணவனை இழந்த பெண்களை குறிவைத்து இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பல கோடி ரூபா மோசடி செய்த நபரை தமிழகத்தின் கோவைப் பகுதி பொலிஸார் தேடி வருகின்றனர்.

மேலும் இது குறித்து பொலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, கோவை, பாப்பநாயக்கன் பாளையத் தைச் சேர்ந்தவர் 45 வயது மதிக்கத் தக்க பெண்ணொருவர். சில வருடங் களுக்கு முன்னர் நோயுற்று இவரது கண வர் இறந்துள்ளார். குறித்த விதவைப் பெண் கடந்தாண்டு திரு மண சேவை மையம் நடத்தி வரும் மோகன் மற்றும் அவரு டைய உதவியாளரான பெண்ணொரு வரையும் சந்தித்து இரண்டாவது திருமணம் செய்வதற்கான வரன்கள் குறித்த விபரங்களை கேட்டுள்ளார்.

அப்போது, புருஷோத்தமன் (வயது 50) என்பவர் இரண்டாவது திருமணத்துக்கு பெண் பார்ப்பதாக தெரிவித்தனர். புருஷோத்தமன் தன் மகளுடன் சென்று குறித்த விதவைப் பெண்ணை சந்தித்துள்ளார். இந்த திருமணத்துக்கு புருஷோத்தமனின் மகள் மற்றும் விதவைப் பெண்ணும் சம்மதம் தெரிவித்ததையடுத்து, கடந்த செப்டெம்பர் மாதம் தமிழகத் தின் சிங்கநல்லூரில் இரு வரும் பதிவு திருமணம் செய்து கொண்ட னர்.

திருமணம் முடிந்து சில தினங்களுக்கு பின்னர் ‘எனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கோடிக் கணக்கில் வர வேண்டியுள்ளது. இதை வசூலிக்க பணம் வேண்டும்’ எனக் கூறி மனைவியிடமிருந்து, மூன்று கோடி ரூபாவுக்கும் மேல் வாங்கியுள்ளார். மனைவியிடம் இருக்கும் பணம் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில், தொழில் நிமித்தம் வெளியில் செல்வதாகக் கூறி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

புருஷோத்தமன் வீடு திரும்பாத தையடுத்து அவரின் தொலை பேசிக்கு தொடர்பு கொண்ட போது செயலிழக்கப் பட்டிருந்தது, அவர் குறித்து அயலவர்கள் பல தகவல்களை தெரிவித் துள்ளனர். அன்பிறகே தலைமறை வாகியுள்ளதும் அவர் கோடிக் கணக்கில் பணத்தை கொடுத்து ஏமாற்றப்பட்டதையும் புருஷோத்தமன் ஏற்கெனவே பலமுறை திருமண மானவர் என்றும் தெரிய வந்ததையறிந்து அதிர்ச்சியடைந்த பெண், இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதன்பேரில் பொலிஸார் விசார ணையை ஆரம்பித்துள்ளனர்.

இந்த விசாரணையில், புருஷோத் தமன் கடந்த 2016இல் ராமநாத புரத்தைச் சேர்ந்த சாந்தினி என்பவரையும் இதேபோன்று திருமணம் செய்து ஏமாற்றியமை தெரிய வந்துள்ளது. இவருக்கு திருமண சேவையொன்றை நடத்தி வந்த மோகன் மற்றும் அவரது உதவியாளரான பெண் உடந்தையாக இருந்துள்ளனர். இவர், சென்னை, கோவை என இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பல கோடி ரூபா ஏமாற்றியது தெரிந்தது. தலைமறைவாக உள்ள புருஷோத்தமனை பொலிஸார் தேடி வருகின்றனர்.

மேலும் பொறியியல் கல்லூரியில் கல்வி கற்று வரும் புருஷோத்த மனின் மகளும் தனது தந்தை கூறும் பெண்ணிடம் தொலைபேசியில் பேசி ‘எனக்கு தாய் கிடையாது. உங்களது போட்டோவை பார்த்தவுடன், என் தாயின் நினைவு தான் வருகிறது. உங்களை மிகவும் பிடித்து விட்டது’ என உருக்கமாக ஆசை வார்த்தையில் பேசுவதால் இதில் கவரப்பட்ட பெண்கள் இவரிடம் சிக்கி பல கோடிகளை கொடுத்து ஏமாந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

(Visited 24 times, 1 visits today)

Post Author: metro