சிறுபான்மைக் கட்சிகள் அரசுடன் இணைந்து செயற்படுவதற்காக தனித்துவத்தை விட்டுக் கொடுக்கத் தேவையில்லை! – வேலுகுமார்

(வத்­து­காமம் நிருபர்)

சிறு­பான்மைக் கட்­சிகள் அர­சுடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்­காக சிறு­பான்மை அடை­யா­ளத்­தையும், தனித்­து­வத்­தையும் விட்டுக் கொடுக்கத் தேவை­யில்லை. அவ்­வாறு சிறு­பான்மை தனி அடை­யா­ளத்தை வெளிப்­ப­டுத்த கண்டி மாவட்­டத்தில் நாம் பின்­பற்றும் முறையே சரி­யா­னது என்று கண்டி மாவட்ட நாடாளுமன்ற அங்­கத்­தவர் வேலு­குமார் தெரி­வித்தார்.

உள்­ளூ­ராட்சி மன்ற வேட்­பா­ளர்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்கும் வைப­வம் கண்டி டெவோன் ஹோட்­டலில் நடை­பெற்­றது. இங்கு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.  தொடர்ந்து உரை­யாற்­றிய அவர், எதிர்­கா­லத்தில் நடை­பெறப் போகும் தேர்தல் முறை­யா­னது ஏற்­க­னவே நாட்டில் இருந்த அனைத்து தேர்தல் முறை­யிலும் வித்­தி­யா­ச­மா­னது.

அன்றும் புள்­ள­டி­தானே போட்டோம் இப்­போதும் புள்­ள­டி­தானே என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் பாரம்­ப­ரி­ய­மாக ஒரு வரை­ய­றுத்த எல்லை தீர்­மா­னிக்­கப்­பட்டு அதில் பலர் போட்­டி­யி­டுவர். அவர்­களில் அதி­கூ­டிய வாக்குப் பெற்­றவர் வெற்றி பெற்­ற­வ­ராகக் கருதப்படுவார்.

இது பாரம் பரிய முறை­யாகும். ஆனால், மேற்­படி வரை­ய­றுத்த எல்­லைக்குள் குறிப்­பிட்­ட­ளவு சிறு­பான்­மை­யி­னரின் விகி­தா­சாரம் இல்­லாத கார­ணத்தால் சிறு­பான்­மை­யினர் வெற்றி பெறு­வது சிர­ம­மாக உள்­ளதை உணர்ந்­தனர். இதன் கார­ண­மாக 1977 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்த அரசு தேர்தல் முறையில் விகி­தா­சார முறையை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. இது இது­வரை பின்­பற்­றப்­பட்­டது. இதிலும் சில குறைகள் அவ­தா­னிக்­கப்­பட்­டன.

அதா­வது தொகு­தியில் பொறுப்புக் கூறும் வாக்­கா­ளரும் இல்லை. தொகு­திக்கு பொறுப்புக் கூறும் அங்­கத்­த­வரும் இல்லை. தமக்கு வாக்­க­ளித்த பிரிவைக் கூட இனம் காட்ட முடி­யாத நிலை இருந்­தது. பெரிய பரப்­புள்ள தொகு­தியை அதா­வது முழு மாவட்டத்திற்கும் ஓடித்திரிய வேண்டிய நிலை வந்தது. பாரிய பணச் செலவு ஏற்பட்டது. இக்குறைகளை தீர்க்கவே தற்போது கலப்பு முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

(Visited 14 times, 1 visits today)

Post Author: metro